Skip to main content

Posts

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

தமிழ்

10.48மணிக்கு நியூஸ் தமிழ் செய்தி சேனலை பார்த்துக் கொண்டிருந்தேன் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தன்னை காதலித்து திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணோடு விமானத்தில் இறங்கி வருவதை அறிந்து அவர்களுடன் தகராறு ஈடுபட்டார் அந்த பெண்மணி. இந்நிகழ்வை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது அல்லது கேட்டபோது எனக்கு சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் தமிழ் படித்ததால் அநேக வேலைகளில் கேட்கும் ஏதோ ஒரு செய்திகள் அல்லது பார்க்கும் ஒரு காட்சிகள் எனக்கு திடீரென சங்க இலக்கியத்தை நினைவூட்டும் ஏனென்றால் நான் தமிழ் படித்த ஒரு சுரேஷ் “பூத்த பொங்கர்த் துணையுடன் வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் தோன்றும்...” ( அகநானூறு- 4 ) தன்னுடைய காதல் அதாவது தலைவன் வினைபொருட்டு அதாவது பணம் ஈட்டுவதற்காக அல்லது அல்லது அரசனுக்கு போரின் பொருட்டு உறுதுணையாக ஒரு துணையாக தன்னுடைய காதலியாகிய தன்னுடைய தலைவியை அவன் பிரிந்து சென்று விட்டான்‌. மீண்டும் அவன் வரும் காலத்தை நினைத்து என்று? வருவான் .எப்போது வருவான்? என்று நினைத்து காத்துக் கொண்டிருக்கும் தல...

அவளுக்கு

மறுபிறவியிலேனும்  மனைவியாக வாய்ப்பளா ? என் முதல்காதலி      அவள் நினைவுகளை  சுமந்து சுமந்து  நெஞ்சம் நோகிறது  புகைப்படத்தைப் பார்த்து பார்த்து  கண்கள் கசிகிறது  வடக்கில் இருந்து வரும்  வாடைக்காற்றோ  வாட்டித் தொலைக்கிறது  ஒற்றை மாடு பூட்டப்பட்ட  வண்டிகாரன் நிலையில்  வாழ்ந்து கழிக்கிறேன்  இருந்து அல்ல.

க.சொ.க

திருமணம் நடக்கப் போகிறது அந்த இளம் பெண்ணுக்கு, அவளுடைய தாய் தன்னால் முடிந்த அளவு உழைத்த பணத்தைக் கொண்டு, தன் மகளுக்கு சீரும் சிறப்புமாக மணமுடித்து வைக்க தயாராகிறாள்  அந்த தாய்.    மணமேடையில்  மணமகன் ,மணமகளின் கழுத்தில்   மங்கல நாண் அணிவிக்கப் போகிறான். அந்தத் தாயோ மணமக்களுக்கு முன்னே, அருகிலோ நிற்க முடியாத சூழல். ஏனெனில் அந்தத் தாயின் கணவனோ  ஓராண்டுக்கு முன் மறைந்து விட்டார்.  அதனால் அவள் திருமணப்பந்தலுக்கு , வெளியே ஓர் புறத்திலே ,பக்கவாட்டில் வேயப்பட்ட கீற்றை விளக்கி அந்த நிகழ்ச்சியை கண்கள் கசிந்தவாறு, கண்ணார தன் மகளின் திருமணத்தை பார்த்தாளாம். இந்த நிகழ்வு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஓரிடத்திலே அவரது " நெஞ்சுக்கு நீதி "நூலில் படித்திருக்கிறேன். அதே போல ,அதே சூழல்தான் ,தற்போது எனக்கும், பழூர் 03.03.2025 திங்கள் மாலை அ(இ)ன்று இந்நிகழ்ச்சி என்பதை கட்செவி புலனஞ்சல், முகநூலிலும் பார்க்கிறேன் அனைத்துப் பொறுப்பாளர்களின் பெயர்களைப்  ( Responsibility given by the party ) மாவட்டப் பிரதி என்ற சொல்லைப் படிக்கிற போது ஆண்டு 2010 க்கு சிந்தைக்குள்...

புளியமரம்

கரையோர புளியமரம் எங்க ஊரு ஆண்டேரிக் கரையோரம்  எங்களுக்கோ !   இரண்டு வீட்டுக்கும் பொதுவான ஒரு புளியமரம். முப்பாட்டன் வச்ச மரம்  மூன்றுத் தலைமுறையின்  காலடித்தடம் பட்ட இடம் குளிக்க வரும்  சிறுசுகளால்  புளிப்பான பழத்துக்காய்  கல்லடி பட்ட மரம்.  தாடிவீட்டுப் படித்துறை கரையோரம்  செழிப்போடு வளர்ந்த மரம் இடுப்பழகி நடிகை போல கொஞ்சம்  கிழக்கு நோக்கி அது  சாஞ்சிருக்கும் . பொன்னிறமாய் பூ பூக்கும்  பார்ப்போர் ரெண்டு கண்ணும் அந்த அழகில்  சொக்கி நிற்கும்  பூவோடு சேர்ந்த இளம்பிஞ்ச கடைவாயில் கடிச்சாக்க நாவரும்பு புளிப்பாலே வெட்கப்படும்  பூ கொஞ்சம்,பிஞ்சாகி , வந்த பிஞ்சு கொஞ்சம் காயாகி , காயில் கொஞ்சம் பழமாகி , அறுவடைக்கு காத்து நிற்கும் அந்த அறுவடை திருநாளுக்காய்  பொடுசுக நாங்க காத்திருப்போம் . சின்ன அப்பாயி தலைமையில  சொந்தகார குட்டாறு பெரியப்பா புளியம்பழம் உலுக்கையில  ரெண்டு சணல் கோணி கொண்டு போவோம் விழும் பழம் பொறுக்கிப்போட நாலு சின்னக்கூடையும் கொண்டு போவோம் . உலுக்கிய பழம் சேகரித்து  முட்டாக கொட்டி வைப...

களவும் கற்று மற

களவும் கற்று மற.! திருட்டையும்  கற்றுக் கொண்டு மறந்து விடு. என்றா ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டு வரையறை செய்யவியலாத நம் மூத்த தமிழினமா சொல்லியிருக்கும் ?   நிச்சயம் கனப்போதும் வாய்ப்பில்லை.  பொருளை மாற்றிப் புரிந்து கொள்வது நம் தவறே. ஆம் பழந்தமிழ் சங்கத் தமிழரின் வாழ்வியல் முறை  இரு பகுதியாக பகுக்கப் பட்டிருந்தது.  முன்னது ( திருமணத்திற்கு  முன் ) களவு வாழ்க்கை , பின்னது ( தி பி) கற்பு வாழ்க்கை.   மனமொத்த உரிய வயதினையடைந்த ஆணோ, பெண்ணோ தனக்கோ பிடித்தவரை காதல் செய்து, பிறகு ,அது ஊராருக்கு அம்பலாகவும் ,அலராகவும் பரவுதல் அறிந்து அச்செய்தி தோழி மூலமாக செவிலிக்கு சொல்லி (இங்கு செவிலி என்பது Nurse அல்ல, வளர்ப்புத் தாய்) செவிலி நற்றாய்க்கு சொல்லி ( நற்றாய் எனில் நாற்றங்கால் அல்ல, பெற்றத் தாய்) நற்றாய் இல்லாரிடத்தில் ( ஒன்றும் இல்லாதவர் என்று பொருள் அல்ல,வீட்டார்) கூறி திருமண ஏற்பாட்டுக்கு இசைவு  தெரிவிப்பார்கள். பிறகு அந்த தலைவன் பெண் கேட்டு வருவான், பிறகு திருமணம் செய்து வைத்து கற்பு வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள். இங்கே கற்பு எனப்ப...

தாத்தாவுக்கு

சரியாக நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்தது.......என் தாத்தா தமிழ் நாவல்கள் நிறைய படிப்பார், அவர் புத்தகம் படிக்கும் போது தொந்தரவு செய்தால் 50 பைசா அல்லது 1 ரூபாய் கொடுத்து என்னை வெளியேற்றுவார்,,,, இப்படியே தினமும் என் வருமானம் 2 ரூபாயை எட்டிவிடும்... பிற்கால சோழர்களின் எழுச்சியை இரவு நேரத்தில் கதையாக கூறுவார்,,,96 விழுப்புன் பெற்ற விசயாலய சோழன்,, திருப்புறம்பிய போரில் பாண்டியரை விரட்டியடித்தது,, இப்படியாக சுவைபட கூறுவார். அவரின் படுக்கையருகில் புத்தகங்கள் நிறைய இருக்கும்,,ஒருநாள் நான் "கோபல்ல கிராமத்து மக்கள் " என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன், அந்நாவலை படிக்க படிக்க சுவையாக இருந்தது,,,,அக்கதையும் மனதில் பதிந்து விட்டது,, கல்லூரியில் நான் முதுகலை தமிழ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது தாத்தாவின் உடல்நிலை சரியில்லை ,,அப்போதும் அவர் என்னிடம் கேட்ட புத்தகம் "கலைஞரின் "பொன்னர் சங்கர் " நானும் ஒரு நண்பரிடம் வாங்கி தந்தேன்,,அதை 2 நாளில் படித்து முடித்தார்,,,இன்னும் என்ன புத்தகம் உள்ளது என்று கேட்டார்,,நான் உடனே தலைவரின் "சங்கத்தமிழ் ...

தமிழா ! தமிழா

எந்த வேலைப் பொழப்பும் இல்லை என்றால் மட்டுமே தமிழையும், அதன் ஆதிகாலத்திய இலக்கிய இலக்கணம் தொடங்கி, தற்காலத்திய வரையிலான நூல்களை படிக்க வேண்டும். ஏனெனில் ஒற்றை தமிழ் சொல்லின் விரிவு பலவாறனாதாக விரிந்து கொண்டே செல்லும். எதனால் கூறுகிறேன் என்றால் ? எந்த வேலைப் பொழப்பும் இல்லை என்றால் மட்டுமே தமிழையும், அதன் ஆதிகாலத்திய இலக்கிய இலக்கணம் தொடங்கி, தற்காலத்திய வரையிலான நூல்களை படிக்க வேண்டும். ஏன் சொல்கிறேன் ?  எப்படி   சொல்கிறேன் என்றால் ? வாங்க படிக்கலாம்  நம் தமிழர்கள் பயன்படுத்திய,  நீர்நிலைகளும்  அவற்றுக்கான பெயர்களும். 01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு - (Well in Seashore) கடலுக்கு அருகே தோண்டி, கட்டிய கிணறு 04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி. 05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம். 06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. 07. ஊருணி -(Drinking water...

படித்ததில் பிடித்தது.

சமீபத்தீல்  ஒரு பாக்கெட் காற்று வாங்கினேன். கம்பெனிக்காரர்கள் நல்லவர்கள் போலும்  அதில் சில சிப்ஸ்களையும்  போட்டிருந்தனர்.  ###BINGO

சுத்தமல்லி,புளியங்குழி

அரியலூரில் இருந்து தென்கிழக்கே 22 கி மீ தொலைவில் உள்ள ஊர் ஜெ.சுத்தமல்லி. அங்கிருந்து 6 கீ மீ தெற்கே சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட ஓர் அழகிய சிற்றூர் புளியங்குழி .இவ்வூர்  நிலவமைப்பு செம்மண் நிறைந்த, முந்திரி காடுகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கிருந்து 7 கி மீ தொலைவில் வற்றாது வளங்கொழித்து ஓடுகிறது கொள்ளிடம் என்கிற பொன்னி நதி.  ஆனாலும் இந்த ஊர் மேடான சிவந்த சரளைக் கற்கள் கொண்ட மேட்டுப்பகுதி என்பதால், முற்காலங்களில் வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிர்களே விளைந்தது. வளர்ந்து விஞ்ஞான அறிவியல் கருவிகளின் வரவால் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் உதவியால் சுத்தமல்லி கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் ஆழ்ந்த உழைப்பை செலுத்துகின்றனர். முற்காலத்தில் அரியலூர் என்றால் எவ்வாறு கொத்தமல்லி பிரபலமோ ,அதே போல் சுத்தமல்லியும் ஒரு காலத்தில் கொத்தமல்லிக்கு பிரபலம்.   கரிசல்மண் நிறைந்த பகுதியில்தான் இப்பயிர் அமோகமாக விளையும்.  சுத்தமல்லி, புளியங்குழி, ஆலவாய், உல்லியக்குடி, கோரைக்குழி, இன்ன பிற சுற்றுவட்டார ஊர்களில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திர...

ஆலம்பள்ளம்

 எங்கள் ஊர் சுத்தமல்லி அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தின் பெயர் ஆலம்பள்ளம். பொதுவாக அந்த ஊருக்கு உள் நுழையும் முன் மிக சரிவான பள்ளத்தில் இறங்குவது போன்ற நிலவியல் அமைப்பு இன்றும் இருக்கிறது. ஒரு வேளை ஆள் உயர பள்ளம் (அ)ஆல் உயர பள்ளம் அதாவது ஆலமர உயர அளவு பள்ளம் என்பதே இவை மருவி ஆலம்பள்ளம் என வந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்.  --------+-சுரேஷ் மணியன் M.A,

நான் ஏன் தமிழ் படித்தேன்?

நான் ஏன் தமிழ் படித்தேன் ? எதனால் தமிழ் பாடத்தை தேர்வு செய்தேன் ?  இது போன்ற இன்ன பிற கேள்விகளும் தூக்கமில்லா இரவுகளில் எனக்குள் நானே எழுப்பி கொள்வதுமுண்டு.  அப்போ நான் பத்தாவது படிக்கறச்சே,  கேபிள் கனெக்ஷன் கிராமத்தை எட்டிப் பார்க்காத அந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி சேனல் மட்டுமே வாய்த்தது. ஞாயிறு மாலை மட்டுமே திரைப்படம் போடும் முன்னதாக, வசந்த் &கோ நிறுவனம் வழங்கும் " சாப்பிடலாம் வாங்க " என்கிற சமையல் நிகழ்ச்சியின் முடிவில் சமைத்த பதார்த்தங்களை உண்டு ருசி பார்த்து பரிசு தர வருவார் அமரர் வசந்தகுமார் அவர்கள்.  அப்போது அந்நிகழ்ச்சியின் நெறியாளர் வசந்தகுமாரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்  .  நீங்கள் ஒரு தொழிலதிபர் ஆகாவிட்டால், வேறு என்னவாக ஆகியிருக்க ஆசைப்பட்டிருப்பீர்கள் ?  என்று, வசந்தகுமார் கூறினார் " நான் தமிழ் படித்து ஒரு தமிழ் பேராசிரியராக ஆகியிருப்பேன், எனக்கு கம்பனின் ராமகாதை மிகவும் பிடிக்கும்  ராமன் நாடு துறந்து காடேகும் நிகழ்வை கம்பர் பாடுவார்  சீரை சுற்றித் திருமகள் பின்செல, மூரி விற்கை இளையவன் முன்செல, காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ் ...

தாங்கல், தாங்கல்

ஏந்தல், தாங்கல், என்ற இரு சொற்களின் பொருளறிவோம்  அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில்  இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது . ஆனாலும் இரு சொற்களும் நீர்நிலையை குறிக்கும் சொல்லாகும்.  மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை உடைய நீர் நிலை  ஏந்தல் ஆகும்.உடையார்பாளையம் அருகே உள்ள இடையாறு பக்கம் உள்ள ஏரிக்கு அருகே உள்ள ஊரின் பெயர் ஏந்தல் ஆகும். ஏரியின் பெயரே ஊர்ப்பெயராகவும் ஆயிற்று. தாங்கல் என்பது அருகில் உள்ள ஏரியின் உபரி நீர் அல்லது ஆற்று நீரை சேமிக்கும் நீர் நிலையின் பெயரே தாங்கல் ஆகும் .தாங்கலேரி எனும் பெயர் கொண்ட ஏரி தத்தனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்திற்கு நீர்நிலையின் பெயர் தாங்கலேரி என்பதாம்.   ஆக ஏந்தல், என்பதும், தாங்கல் என்பதும் நீர்நிலையின் பெயராகும்.  ஆய்ந்தறிவீர் தமிழ் மறவீர்! இப்படிக்கு - சுரேஷ் மணியன் M.A,

வாழ்க்கை

உலகில் தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்ல ஒரு சராசரி நபர் என்ன செய்ய முடியும்? வேண்டும் ? என்ற கேள்வி உனக்குள்ளே எழுமானால் , அதற்கான பதில் இதோ !  பிரபல கியூபா எழுத்தாளரான ஜோஸ் மார்டி ஒவ்வொரு மனிதனும் இறப்பதற்கு முன்பாக, பின்வரும் விஷயங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவையாவன; Have a child, Plant a tree, Write a book - Jose Marti ஒரு குழந்தை பெற்றுக் கொள், ஒரு மரத்தை நடு, புத்தகம் ஒன்றை எழுது - ஜோஸ் மார்டி குழந்தையைப் பெற்றுக் கொள்வதன் மூலம், அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதன் மூலம், சமுதாயத்திற்கு நல்லதொரு குடிமகனை உருவாக்கிக் கொடுக்கிறார். அந்த குழந்தை, சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மரத்தை நடுவதன் மூலம், உலகம் பசுமையாக தொடர்ந்து இருப்பதற்கான தனது பங்கினை விட்டுச் செல்கிறார். பல தலைமுறைகளுக்கு, அந்த மரம் தனது கனிகளை கொடுக்கும். நிழல் கொடுக்கும். ஆக்ஸிஜனை பரப்பும். மழையை கொண்டுவரும். பூமி வெப்பமடையாமல் காக்கும். புத்தகம் ஒன்றை எழுதுவதன் மூலம், தனது அறிவனை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டுச் செல்கிறார். அவர்கள் அதனைப் பயன்படுத்தி, இன்னும் மேன்மேலும், அறிவனை வளர்...

மக்களோடு நான் _ நூலில்

எனது நேரடி பார்வையில் படும் விதமாக வைத்துள்ள எனது புத்தக அலமாரியில் நம் மாண்புமிகு அமைச்சர் .  S. S. S அண்ணனின் " மக்களோடு நான் " நூல் நடுநாயகமாக வைத்திருப்பேன். மாதம் ஒரு முறையேனும் சில பகிர்வுகளைப் படித்து  பல மேன்மக்களின் ஆளுமைப்பண்புகள் குறித்து வியப்பதுண்டு.    ஆலத்தூர் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களைப் பற்றி, நம் அண்ணன் மாண்புமிகு. அமைச்சர் அவர்கள்  " மக்களோடு நான் " நூலில் குறிப்பிட்டுள்ள ஹாஸ்யமான பகிர்வும் பதிவும் இதோ   " எங்க அண்ணன் ஒருத்தர் இருக்கார். அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. குன்னம் தொகுதியில் உள்ள ஆலத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் . ஏழு முறை ஒன்றியச் செயலாளர் .உள்ளாட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதி.மக்களின் அன்பைப் பெற்றவர்.  அவர் எல்லோரையும் அண்ணன்னுதான் கூப்பிடுவார், தன்னை விட வயது குறைந்தவர்களையும். முன்னாள் ( இந்நாள்)  அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்களின் மச்சினர்.  ஒரு முறை, மீன்வளத் துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமி அவர்கள்  எங்கள் பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தாரு.  அவரை வரவேற்று அ...

தீர்ப்பு

               "" தீர்ப்பு '' பொழுது சாயுற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடிதான், வயதான ஒண்டிக் கட்டையான தனக்கு ஒதுக்கியிருந்த  ஆண்டேரிக்கு தெக்குபக்கமுள்ள  தன்னுடைய வயக்காட்டில் ஊனியிருந்த  மொளகாய் கன்றுகளை பார்த்துட்டு,            " நாளைக்கு காலையில் சின்ன ஓடையிலிருந்து தண்ணி மொண்டு மொளாக் கன்னுக்கு  குழித் தண்ணி ' ஊத்தியாகணும் என்ற முடிவோடு, எப்போதும் தான் குளிக்கிற, தாமரைக்கொடி மண்டிக் கிடக்கும்  ஆண்டேரிக்கரை  மாது ஊட்டுத்துறைக்கு வந்து சேர்ந்தார் நம்ம கிருஷ்ண  படையாச்சி.    அந்த ஊரு பிறை நிலா வடிவான  தாமரைக்கொடி நிறைந்தஆண்டேரியில் ,சிமெண்ட் படிக்கட்டுகள் அமைக்கப்படாத அந்த நாளில்  குளிக்கக் கூடிய ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பேரு புழக்கத்தில் இருந்தது.  ஏரிக்கு  வடமேற்கே அரசமரம் பக்கத்தில்  உள்ள குளியல் துறைக்கு மனியாரு ஊட்டு துறை என்று பெயர் , ஏன்னா ?  அந்த குளியல்  துறைக்கு மேற்கு பக்கத்தில்  மணியார் குடும்பத்து சின்னசாமி வீடு இர...

அல்லல் ,அள்ளல்

பொருளறிவோம்  அல்லல் _   துன்பம் ,கஷ்டம்   எ கா ; 1  அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி (  குறள் எண்:245 ) எ கா ; 2.  "அல்லல் உழப்பிக்கும் சூது '    குறள் _ 938  எ கா ; 3    அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று _ ( திருவாசகம் 90 ) அள்ளல் _  எனும் சொல்லுக்கான பல பொருள்கள்  எடுத்தல், அள்ளுதல், பறித்தல், சேற்று நிலப்பரப்பு, நெருக்கம், ஒருவகை நரகம் எ கா ; 1  " அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ'                  _  ( முத்தொள்ளாயிரம் )  மேற்காணும் பாடலில் "அள்ளல்' எனும் சொல் சேற்று நிலப்பரப்பை குறிக்கிறது . அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம் ; கரிசல்நாடன் M,A 

குறள்கவிதை

குறள்கவிதை  இப்பிறவியில் உனைவிட்டு பிரியமாட்டேன் என்று  அவளை இறுகத் தழுவினான், அவன் .  அவளோ! மறுபிறவியில்  நீ என்னை விட்டு  பிரிந்துவிடுவாயா ? என நினைத்து  கண் நீர் பொழிந்தாள்.                  கரிசல்நாடன்  இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்

காரியம் ஆக வேண்டும்னா, கழுதைக் காலை வேண்டுமானாலும் பிடி

காரியம் ஆகனும்னா...!? கழுதையானாலும் காலை பிடி...!!! கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன், மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்... இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை. கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்... குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன...  எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார்... உடனே தேவகி கணவன் வசுதேவன்... தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்... கழுதையும் கத்தவில்லை... கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!! கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது. சுரேஷ்மணியன் M A 

நீர்நிலைகளின் பெயர்காரணங்கள்

நீர்நிலைகளின் பெயர்காரணங்கள்.  குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை) ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை) ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக) பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை) மடு கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை) மோட்டை அள்ளல் கிணறு துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை) தடாகம் அல்லது வாவி ஓடை அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்) அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் ) அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்) அகழி - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்) அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு.  தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது. இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர். கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை. கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை. சுனை - ம...