Skip to main content

Posts

Showing posts from August, 2019

சீதை

ஆதிகாலத்தில் ஆண்ட்ராய்டு போன் அன்றிருந்து சீதையை கடத்தும் போது ராவணன் செல்பி எடுத்து போட்டிருந்தால் சீதை தீக் குளித்திருக்க மாட்டாள் போல

நாணம்

யானை வெட்கப்படுவதை பார்த்திருக்கீன்றீர்களா ?  ( அல்லது ) கேள்விப்பட்டுள்ளீர்களா?  திருக்குறளில் ஒரு தலைவி தன்னுடைய தலைவன் தன்னை பார்ப்பது அறிந்து அவனை  நிமிர்ந்து பார்ப்பதற்கே வெட்கப்படுகின்றாள் என்பதை நம் திருவள்ளுவ பாட்டன் அழகாக சொல்வார் யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் இதன் பொருள் யாதெனில், நான்  அவளை நோக்கும்போது அதாவது பார்க்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், நான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள் அல்லது புன்முறுவல் செய்வாள். ஆக ஒரு பெண் தன்னுடைய காதல் வாழ்க்கையின் துவக்க காலத்தின் போது வெட்கத்தின் மூலமாக " உன்னை நான் ஏற்றுக் கொள்கிறேன் " என்பதை விழி மொழியால் அறிவிக்கின்றாள். மேற்கண்ட குறளை மையமாகக் கொண்டு வாழ்க்கைப்படகு எனும் படத்தில கவியரசு  கண்ணதாசன்  MSV இசையில் ஒரு பாடலில் நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ காணும் வரை நீ எங்கே நான் எங்கே கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்கின்றாயே விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ

தொல்காப்பியர் மன்றம்

தொல்காப்பியா் மன்ற தொடக்க விழா எம்.ஆர்.கல்லூரியில் தொல்காப்பியா் மன்ற தொடக்க விழா உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்காப்பியர் மன்ற தொடக்க விழா நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆலோசகர் முனைவர் தங்க.பிச்சையப்பா, கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சேகர் முன்னிலை வகித்தார். தமிழாய்வுத் துறை தலைவர் சாமிநாதன் மற்றும் மூத்த பேராசிரியர் பழனியாண்டி, கல்வியியல் கல்லூரி ஆலோசகர் வரதராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கு பேராசிரியர் சுரேஷ் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறை முனைவர் அ.சிவபெருமான் அவர்கள் தொல்காப்பியர் மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரையில் தொல்காப்பியம் ஓர் அறிவியல் அளவிலான இலக்கணநூல், வணிகம் செய்கின்றவர்க்கம் இலக்கணம் சொன்ன நூல் எல்லோரும் கற்கவேண்டிய நூல். முதன் முதலாகத் தொல்காப்பியர் விருது பெற்றவர் அடிகளாசிரியர் ஆவார். அவருக்கு அப்போது வயது 100தாண்டியிருந்தது. தொல்க

அரியலூர் தொல்லுயிர் புதைபடிமங்கள்.

நாங்கள் நின்று கொண்டிருக்கும் இடம் மனித இனம் தோன்றுவதற்கு முன், இந்நிலம், கடலுக்கு அடியில் மூழ்கியிருந்தது. பின்னர்  காலநிலைமாற்றங்களால்,  கடல்நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெனிஸ் (gneiss) குடும்பத்தைச் சார்ந்த உருமாறிய பாறைகளால் ஆன தற்போதைய நிலம் வெளிப்பட்டது.   இந்த பாறை வகைகள் வண்டல் மற்றும் ஜிப்சம் பாறைகளால் வெவ்வேறு புவியியல் காலகட்டங்களில் உருவானவை. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாற்றங்களின் காலத்தை புவியியலாளர்கள் ‘கிரிட்டாசியஸ்’ காலம் என குறிப்பிடுகின்றனர். கடல் விலகியதால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, கடல் மற்றும் கடற்கரையிலே வாழ்ந்த பல்வேறு உயிரினங்கள், சகதி மற்றும் சதுப்புநிலத்தில் மூழ்கி படிமங்கள் ஆகின. எனவே நாங்கள் நிற்கின்ற இடம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வகிறது.  ‘புவியியல் ஆராயச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் இங்கே  காணக்கிடைக்கின்றன. டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்காரணங்களால்,

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவரும் ஆண்ட்ராய்டு போனும்.

திருவள்ளுவர் ஓர் நாள் ஆறாயிரம் ரூபாய்க்கு ஓர் ஆண்ராய்டு போனை வாங்கி வொய்பை அழைத்து வைபை முடுக்க சொல்லி வாட்ஸ்அப்பில் ஒரு குரூப்பை தொடங்கி குறளை பதிவிட்டு வந்தார். இவர் " நீரின்றி அமையாது உலகு " என்றார் சட்டென்று ஒரு விடலை " பீரின்றி அமையாது உலகெனச் (chat )சாட்டியது. கோமான் என்பான் குறுக்கே வந்து பெருசு  ,உடையார்கள்தான் அறிவாளிகளாக இருப்பார்களா ? என்றுச் (Chat )சாட்ட உனக்கேன் இந்த அபத்தமான ஐயம் என்று முறைக்கும் முக ஸ்டிக்கரை இவர் அனுப்ப, "  அறிவுடையார் எல்லாம் உடையார் " என நீதானே சொன்ன பெருசு என்று நாக்கினை கடிக்கும் ஸ்டிக்கரையும் சேர்த்து அனுப்பினான். மீண்டும் வொய்பை அழைத்தார் ஆண்ராய்டு அடுப்போடு சாம்பலாயிற்று தாடியை நீவியவாறே பனைமரம் நோக்கி போனார். ----சு.சுரேஷ்மணியன். M A

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை விட்டு சீதையும் இராமன

சுத்தமல்லி இறைவாழ்த்து

இன்று பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவது போல் என் ஊரான சுத்தமல்லியில் ஜம்பது வருடங்களுக்கு முன்னால் தேசிய கீதத்திற்கு முன் ஒரு கிராம கீதம் பாடுவார்களாம்,     அந்த பாடலை என் தந்தை கூற கேட்டுள்ளேன். ஆனால் அந்த பாடலின் ஆசிரியன் யார் என தெரியவில்லை. " எங்கள் ஊர் சுத்தமல்லி விளையும் பயிர் கொத்தமல்லி வடபாகத்தில் கருங்காடு மேல்பாகத்தில் மணல் காடு தென்பாகத்தில் செம்மண் காடு கோடை நாளில் கொத்தி நிலத்தை சீர் செய்வோம் ஆடி மாதம் விதைத்திடுவோம் ஐப்பசிக்கு முன் அறுத்திடுவோம் நாங்கள் பள்ளிக்கூடம் செல்லவே பாலும் சோறும் உண்ணவே எங்கள் அம்மா அப்பா காட்டிலே அலுத்து அலுத்து உழைக்கின்றார் எங்கள் ஊர் சுத்தமல்லி விளையும் பயிர் கொத்தமல்லி. இப்பாடலின் ஆசிரியர் யாரோ  !!! _______சுரேஷ் மணியன். M.A,