Skip to main content

Posts

Showing posts from October, 2021

களவும் கற்று மற

களவும் கற்று மற.! திருட்டையும்  கற்றுக் கொண்டு மறந்து விடு. என்றா ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டு வரையறை செய்யவியலாத நம் மூத்த தமிழினமா சொல்லியிருக்கும் ?   நிச்சயம் கனப்போதும் வாய்ப்பில்லை.  பொருளை மாற்றிப் புரிந்து கொள்வது நம் தவறே. ஆம் பழந்தமிழ் சங்கத் தமிழரின் வாழ்வியல் முறை  இரு பகுதியாக பகுக்கப் பட்டிருந்தது.  முன்னது ( திருமணத்திற்கு  முன் ) களவு வாழ்க்கை , பின்னது ( தி பி) கற்பு வாழ்க்கை.   மனமொத்த உரிய வயதினையடைந்த ஆணோ, பெண்ணோ தனக்கோ பிடித்தவரை காதல் செய்து, பிறகு ,அது ஊராருக்கு அம்பலாகவும் ,அலராகவும் பரவுதல் அறிந்து அச்செய்தி தோழி மூலமாக செவிலிக்கு சொல்லி (இங்கு செவிலி என்பது Nurse அல்ல, வளர்ப்புத் தாய்) செவிலி நற்றாய்க்கு சொல்லி ( நற்றாய் எனில் நாற்றங்கால் அல்ல, பெற்றத் தாய்) நற்றாய் இல்லாரிடத்தில் ( ஒன்றும் இல்லாதவர் என்று பொருள் அல்ல,வீட்டார்) கூறி திருமண ஏற்பாட்டுக்கு இசைவு  தெரிவிப்பார்கள். பிறகு அந்த தலைவன் பெண் கேட்டு வருவான், பிறகு திருமணம் செய்து வைத்து கற்பு வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள். இங்கே கற்பு எனப்படுவது இல்லற வாழ்க்கை.   சரி மேட்டருக்கு வருவோம்.   ஒரு ஆண் கள