Skip to main content

Posts

Showing posts from March, 2019

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

நான் மூன்றாம் வகுப்பு  படிக்கின்ற காலகட்டத்தில் தெருவுக்கு இரண்டொரு வீட்டிலும் ,  டீக்கடையிலும் மட்டுமே வானொலி இருக்கும். அப்போது காலை வேளையில் ஒருவரின் பேச்சைக் கேட்பதற்காக ரோடியோ முன் நிசப்தமாக குழுமி இருப்பார்கள். ஒரு சிறிய கதை சொல்ல ஆரம்பித்து வாழ்வின் யதார்த்த போக்கினை இயல்பாக விளக்குவார் அவர்தான் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தின் கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ள சிற்றூரான தென்கச்சிபெருமாள் நத்தம் ,தா.பழூரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. முழுக்க முழுக்க நெல் மட்டுமே விவசாயப் பயிர்.  அத்தகைய ஊரில் பிறந்தவர்தான்  தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஆவார். ரோடியோவில் அவர் குரலை கேட்கிற போதெல்லாம் நாமாக அவருக்கு ஓர் உருவம் அமைத்து நினைத்து பார்ப்பதுண்டு. தொலைக்காட்சியில் இன்று ஒரு தகவல் என்ற தலைப்பில் அவர் பேசுவதை பார்த்த பிறகே அவரின் தோற்றமும் ,ஹாஸ்ய உணர்வை வெளிக்காட்டாமல், கேட்போரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பாங்கும் ஆச்சரியப்படுத்தியது. நகைச்சுவை குறித்து அவர் கூறியதை கொஞ்சம் படீத்துப் பாருங்கள். ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்