Skip to main content

Posts

Showing posts from October, 2020

குண்டலகேசி

மறிப மறியும் மலி்ர்ப மலிரும் பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும் அறிவது அறிவார் அழுங்கார் உவவார் உறுவது உறுமென்று உரைப்பது நன்று                     ___ குண்டலகேசி  அழியும் பொருளெல்லாம் அழிந்தே தீரும்; (அவற்றை யழியாமற் பாதுகாத்தல் இயலாது)அவ்வாறே வளரும் விதியுடைய எல்லாமும்  வளர்ந்தே தீரும் , (அவற்றை வளராமல் தடுக்க முடியாது)  பயன் பெறுகின்ற விதியுடைடையன பெற்றே தீரும் ,(அப்பயனைப் பெறாதவாறு செய்தல் இயலாது),  அதேபோல  பெற்றபயனை இழக்கும் விதியுடைய அவற்றை இழந்தே தீரும், (இழக்கமுடியாதபடி செய்ய முடியாது ) ஆதலால் அறிதற்குரிய பொருளியல்பினை அறிந்த மேலோர்,  தமக்குப் பொருளிழவு நேர்ந்ததே இது பொருளியல்பென் றுணர்ந்து அந்த இழப்பு பொருட்டு வருந்துதலிலர். அவ்வாறே தாம் சிறந்த பேறுகளைப் பெற்ற வழியும் இஃது ஊழின் செயலென் றுணர்ந்து அப்பேறு கருதியும் பெரிதும் களிப்பதுமில ராவர்;  ஆதலால் “வருவது வந்தே தீரும்” என்று உலகோர் கூறும் பழமொழி மிகவும் வாய்மையுடையதென்று கொள்ளுங்கள் . வணக்கம்  சுரேஷ்மணியன் M A ,

குறள் கவிதை

கண்ணிதழ் மெல்ல மறைத்து பார்வைதன் அளவை சிறுத்து  நீ  பார்த்த  இந்த சிறுபார்வையே  காதல் நோய்க்கு  ஏற்ற மருந்து. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது ( குறள் எண்:1092) சுரேஷ்மணியன் M A, 

கடிகாரம்

என்னை ஏன் அடிக்கடி பார்க்கிறாய்?  பார்த்து என்ன கிழித்துவிட்டாய்?  கிழிக்கப்போகிறாய்?   கேட்டுக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறது  என் கைகடிகாரம் 

குறள்கவிதை

         குறள்கவிதை  மங்கைகொண்ட காதலை மடைமாற்றலாம்  என்று நினைக்காதீர் ! என் இதய வயலில்  நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன் !  ஊரார் ஏளனப் பேச்சை எருவாக்கி  தாயின் இடிச்சொல்லை நீராக்கி  இதய வயலில்  காதல் பயிர் வளர்க்கிறேன் ! பரிகாசம் பேசி காதல் பயிரை  அழித்துவிடலாமென எண்ணாதீர் ! நெய்யை ஊற்றி  நெருப்பை அணைக்க முயலாதீர் ! என் இதய வயலில்  நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன்  .          கவிதையின் கரு  ;  ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் (குறள் எண்:1147) நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் (குறள் எண்:1148) வள்ளுவர் வரிகளுடன்  ; சுரேஷ்மணியன் M A, 

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திருவள்ளுவமாலை 4 ஆம் பாடல் விளக்கம்

திருவள்ளுவமாலையில் உக்கிரப்பெருவழுதியார் பாடியது.  நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம் சிந்திக்க கேட்க செவி ( 4 ) கருத்துரை :  இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார்.       நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின் பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும். என்கிறார் புலவர். சுரேஷ்மணியன் M A, 

கிளியே ! கிளியே!

பாட்டிலுக்கு பெயர் பெற்ற ஊரை  தன் பாட்டினால் புகழடையச் செய்த  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அழகின் சிரிப்பு நூலில் கிளியின் தன்மை, அழகு,  குணம் பற்றி கூறுமிடத்து, ஒரிடத்தில் கிளியைப்பற்றி பாடுகிறார் .   முடிகிற இடத்திலிருந்து புதிய எண்ணங்களும், ஆற்றொணா வருத்தமும் இக்காலத்திய இளையோர் பற்றி நினைக்கையில் மேலிடுகிறது எனக்கு  "" காட்டினில் திரியும் போது கிரீச்சென்று கழறு கின்றாய்; கூட்டினில் நாங்கள் பெற்ற குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்! வீட்டிலே தூத்தம் என்பார் வெளியிலே பிழைப்புக் காக ஏட்டிலே தண்ணீர் என்பார் உன்போல்தான் அவரும் கிள்ளாய்!  '' கிளியே ! காட்டில் திரிகிறபோது கிரீச் கிரீச்சென்கிறாய்  கூட்டில் இருக்கும் போது  எங்களின் குழந்தைகள் மழலைமொழி போல கொஞ்சுகிறாய்  சிலர் வீட்டில் இருக்கும் போது "" தூத்தம் '' ( அக்ரஹார வழக்கு ) என்பார் ,பொதுவெளியில் வந்தால் அதனை தண்ணீர் என்பார்கள். உன்னைப் போல்தான் அவரும் கிளியே வீட்டில் ஒன்று பேசுவார் வெளியில் ஒன்று பேசுவார்.  என்கிறார் பாவேந்தர்.  மேற்கண்ட கிளிக்கு கூறிய ஒப்புமையை, தற்கால நம் தமிழர் பேசும் முறையோடு ஒப்பிட்

கவிதைக் குறள்

 உன்னைவிட்டு நான்  பிரிந்திருந்த  காலமெல்லாம்  உன்னை நினைப்பேன் தெள்ளமுதே!  என்னுயிரே! என்கிறேன். நீயோ ! மறந்தால்தானே நீ என்னை  நினைக்க வேண்டும்  அவ்வாறெனில்  எனை அவ்வப்போது மறப்பாயோ ?  என்று  எந்தன் தோளைத் தழுவாது  பொய்க்கோபம் கொள்கிறாயே !  உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றெம்மைப் புல்லாள் புலத்தக் கனள் (புலவி நுணுக்கம் .குறள் எண்:1316) சுரேஷ்மணியன் M A, கரிசல்நாடன் கவிதைக்குறள். 

வாழ்வியல் கவிதை

கடும் பாலை மணற்பரப்பிடையே  சுடும் கொடும் புழுதிக்காற்றுக்கு ஊடே  இதழ்நுனியில் சிகரெட் பதிந்திருக்க  விரல்நுனியிலிருக்கும் தீக்குச்சியாய்  தருணம் பார்த்தே கடந்து செல்கிறது நேற்றும்,இன்றும் ... சு. சுரேஷ்மணியன் M A, 

மொக்கைப் படாதே

அனைவருக்கும். உங்கள் இனிய நண்பன் சுரேஷ் மணியனின் இராத்திரி வணக்கம் . இன்றைய இலக்கியம் சார்ந்த கிறுக்கலை பார்க்கும் முன், ஒரு சின்ன கலாய்ப்பு. இன்று நம்மில் , படித்த பல பேர் தமிங்கிலம் தான் பேசுகிறார்கள். சிலர் ஓரளவு தமிழ்நடையை பின்பற்றி பேசுகிறாகள். ஆனாலும் அதிகமான நபர்கள்  சில வார்த்தைகளை இம்மியளவேனும் பயன்படுத்துவதில்லை. அந்த வரிசையில் இன்றைய வார்த்தை  "' இராத்திரி ''  தமிங்கிலர்கள் பேசும் முறை   1 .மார்னிங் என்ன சாப்பிட்ட? 2 .லன்ச்சுக்கு என்ன ஐட்டம்  எடுத்து வந்துருக்க.?  ஓரளவு தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துவோர்  பேசும் முறை  1 .காலையில என்ன சாப்பிட்ட.? 2.மதியம் சாப்பிட என்ன கொண்டு வந்துருக்க. ? ஆனால் மேற்கண்ட இரு அணியும் சொல்லி வைத்தாற் போலும் பயன்படுத்தும் வார்த்தை  நைட் என்ன டின்னர்  & சாப்பாடு ? இராத்திரி எனும் வார்த்தை அவர்களுக்கு அருவருப்பு போல! கிராமத்தில் மட்டுமே மேற்கண்ட இராத்திரி எனும் சொல் பல்வேறு முறைகளில்  புழக்கத்தில் இருக்கிறது.  Ex... ராத்திரி சரியா தூங்கல ,  ரவிக்கி வா ,  ராவுல என்ன சத்தம்  இப்படியாக இராத்திரி எனும் சொல்லில் இருந்து சமஸ்கிருதத்தி

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரால் பயிற்றுவிக்கப்படவில்லை என்றே  சொல்லலாம்.. திருக்குறளில் அறம், பொருள் பயிற்றுவித்த அளவு காமத்துப்பால்