பாட்டிலுக்கு பெயர் பெற்ற ஊரை தன் பாட்டினால் புகழடையச் செய்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அழகின் சிரிப்பு நூலில் கிளியின் தன்மை, அழகு, குணம் பற்றி கூறுமிடத்து, ஒரிடத்தில் கிளியைப்பற்றி பாடுகிறார் . முடிகிற இடத்திலிருந்து புதிய எண்ணங்களும், ஆற்றொணா வருத்தமும் இக்காலத்திய இளையோர் பற்றி நினைக்கையில் மேலிடுகிறது எனக்கு "" காட்டினில் திரியும் போது கிரீச்சென்று கழறு கின்றாய்; கூட்டினில் நாங்கள் பெற்ற குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்! வீட்டிலே தூத்தம் என்பார் வெளியிலே பிழைப்புக் காக ஏட்டிலே தண்ணீர் என்பார் உன்போல்தான் அவரும் கிள்ளாய்! '' கிளியே ! காட்டில் திரிகிறபோது கிரீச் கிரீச்சென்கிறாய் கூட்டில் இருக்கும் போது எங்களின் குழந்தைகள் மழலைமொழி போல கொஞ்சுகிறாய் சிலர் வீட்டில் இருக்கும் போது "" தூத்தம் '' ( அக்ரஹார வழக்கு ) என்பார் ,பொதுவெளியில் வந்தால் அதனை தண்ணீர் என்பார்கள். உன்னைப் போல்தான் அவரும் கிளியே வீட்டில் ஒன்று பேசுவார் வெளியில் ஒன்று பேசுவார். என்கிறார் பாவேந்தர். மேற்கண்ட கிளிக்கு கூறிய ஒப்புமையை, தற்கால நம் தமிழர் பேசும...