Skip to main content

Posts

Showing posts with the label குவளை மலர் . நிலம் .கண்

நிலன் நோக்கும் பூக்கள்

 அணைவருக்கும் வணக்கம்.  ஊரடங்கில் உடல் அடங்கிக் கிடந்தாலும், உள்ளம் அடங்கிடுமா ?  அல்லது தமிழ் இலக்கிய  எண்ணம்தான் மனதில், சிந்தையில்  ஒடுங்கிடுமா ? நான் புது வித கோணத்தில் ( நூலாசிரியன் கருத்து அல்ல)  அணுகிய சில இலக்கியக் வரிகளின் கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இப்பதிவின் நோக்கமாகும். இலக்கியம் என்றாலே, எலக்கியம் கிலோ என்ன விலை?  என்று கேட்கிற புது தலைமுறை வந்துக்கொண்டிருக்கும்  காலக்கட்டத்தில், இலக்கியம் பேசுபவனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டமும் வருகின்ற காலமிது.  ஆனாலும் இலக்கியத் இன்பத்திற்கு நிகர இறைவன் இதுவரை எதனையும் படைத்தளிக்கவில்லை என்றே அறிஞர் உணர்வர். இலக்கியங்கள் படிப்பவனின் காலச்சூழல், மனச்சூழல் ஆகியவற்றிற்கு ஏற்ப தனது கருத்தையும் மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் ஆற்றல் வாய்ந்தது. நூலாசான் கூற வந்த கருத்து உணர்ச்சி  படிப்பவனுக்கும் ஏற்பட வேண்டும். ஆனாலும் படிப்பவன் தன் சமகால சூழலுக்கு ஏற்ப நூலாசானுக்கு சிறுமை ஏற்படாதவாறு, வேறு விதமான பொருளை கூறுதலும் உண்டு. இது தவறல்ல. உதாரணத்திற்கு ஒரு தி...