Skip to main content

Posts

Showing posts from May, 2021

தீர்ப்பு

               "" தீர்ப்பு '' பொழுது சாயுற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடிதான், வயதான ஒண்டிக் கட்டையான தனக்கு ஒதுக்கியிருந்த  ஆண்டேரிக்கு தெக்குபக்கமுள்ள  தன்னுடைய வயக்காட்டில் ஊனியிருந்த  மொளகாய் கன்றுகளை பார்த்துட்டு,            " நாளைக்கு காலையில் சின்ன ஓடையிலிருந்து தண்ணி மொண்டு மொளாக் கன்னுக்கு  குழித் தண்ணி ' ஊத்தியாகணும் என்ற முடிவோடு, எப்போதும் தான் குளிக்கிற, தாமரைக்கொடி மண்டிக் கிடக்கும்  ஆண்டேரிக்கரை  மாது ஊட்டுத்துறைக்கு வந்து சேர்ந்தார் நம்ம கிருஷ்ண  படையாச்சி.    அந்த ஊரு பிறை நிலா வடிவான  தாமரைக்கொடி நிறைந்தஆண்டேரியில் ,சிமெண்ட் படிக்கட்டுகள் அமைக்கப்படாத அந்த நாளில்  குளிக்கக் கூடிய ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பேரு புழக்கத்தில் இருந்தது.  ஏரிக்கு  வடமேற்கே அரசமரம் பக்கத்தில்  உள்ள குளியல் துறைக்கு மனியாரு ஊட்டு துறை என்று பெயர் , ஏன்னா ?  அந்த குளியல்  துறைக்கு மேற்கு பக்கத்தில்  மணியார் குடும்பத்து சின்னசாமி வீடு இருந்ததால் இடுகுறி பெயராக அனைத்து துறையும் பரிமளித்திருந்தது .  அதுக்கு நேர் கிழக்கே உள்ள துறை மாது ஊட்டு துறை, அதுக்கு அடுத்து கொழுந்

அல்லல் ,அள்ளல்

பொருளறிவோம்  அல்லல் _   துன்பம் ,கஷ்டம்   எ கா ; 1  அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி (  குறள் எண்:245 ) எ கா ; 2.  "அல்லல் உழப்பிக்கும் சூது '    குறள் _ 938  எ கா ; 3    அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று _ ( திருவாசகம் 90 ) அள்ளல் _  எனும் சொல்லுக்கான பல பொருள்கள்  எடுத்தல், அள்ளுதல், பறித்தல், சேற்று நிலப்பரப்பு, நெருக்கம், ஒருவகை நரகம் எ கா ; 1  " அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ'                  _  ( முத்தொள்ளாயிரம் )  மேற்காணும் பாடலில் "அள்ளல்' எனும் சொல் சேற்று நிலப்பரப்பை குறிக்கிறது . அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம் ; கரிசல்நாடன் M,A