Skip to main content

Posts

Showing posts with the label அரியலூர். தொல்லுயிர் படிமங்கள்.

அரியலூர் தொல்லுயிர் புதைபடிமங்கள்.

நாங்கள் நின்று கொண்டிருக்கும் இடம் மனித இனம் தோன்றுவதற்கு முன், இந்நிலம், கடலுக்கு அடியில் மூழ்கியிருந்தது. பின்னர்  காலநிலைமாற்றங்களால்,  கடல்நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து ஜெனிஸ் (gneiss) குடும்பத்தைச் சார்ந்த உருமாறிய பாறைகளால் ஆன தற்போதைய நிலம் வெளிப்பட்டது.   இந்த பாறை வகைகள் வண்டல் மற்றும் ஜிப்சம் பாறைகளால் வெவ்வேறு புவியியல் காலகட்டங்களில் உருவானவை. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மாற்றங்களின் காலத்தை புவியியலாளர்கள் ‘கிரிட்டாசியஸ்’ காலம் என குறிப்பிடுகின்றனர். கடல் விலகியதால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, கடல் மற்றும் கடற்கரையிலே வாழ்ந்த பல்வேறு உயிரினங்கள், சகதி மற்றும் சதுப்புநிலத்தில் மூழ்கி படிமங்கள் ஆகின. எனவே நாங்கள் நிற்கின்ற இடம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வகிறது.  ‘புவியியல் ஆராயச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. மரம், விலங்கு மற்றும் தாவர இனங்களின் பல்வேறு வகையான படிமங்கள் இங்கே  காணக்கிடைக்கின்றன. டைனோசர் முட்டைகள் கல்லங்குறிச்சி மற்றும் நிண்ணியூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்...