Skip to main content

Posts

Showing posts from November, 2018

மல்லிகையே மல்லிகையே

இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்றால், அவர்களை நாம் விலக்கிவிட  முயலும் போது நமக்கும் கொஞ்சம் அடி விழத்தான் செய்யும்.  ஆனால் எதிரெதிரே இருக்கக்கூடிய  இரண்டு ஸ்வீட் கடைக்காரர்கள் சண்டை போட்டுக் கொண்டால் நமக்குதான் மகிழ்ச்சி வரும்.    ஏனெனில் ஒருவன் மைசூர்பாக் மிட்டாயை எடுத்து வீசி அடுத்த கடைக்காரனை அடிப்பான், அவனோ ஜிலேபியை எடுத்து இவனை நோக்கி  வீசுவான் இப்படியாக சண்டை நடந்தால் நமக்குத்தான் லாபம் மற்றும் மகிழ்ச்சிதானே ! .     மேலே சொன்ன நிகழ்வைப் போல இரு புலவர்கள் கவிதைச் சண்டை போடுகிறார்கள் ஒருவர் ஒட்டக்கூத்தர் மற்றொருவர் புகழேந்திப் புலவர். இது கண்ணால் பார்த்ததல்ல, கல்லூரியில் படிக்கிற காலத்தில் தத்தனூர் கிளை நூலகத்தில் பழைய நூல்களை எடைப்போட்டு வாங்கிய போது கிடைத்த தனிப்பாடல் திரட்டு எனும் நூலில்  படித்தது என்றுணர்கிறேன்.  சோழன் அவைக்களத்திலே தலைமைப் புலவன் ஒட்டக்கூத்தன் முன்னிலையில் நளவெண்பா எனும் நூல்  அரங்கேற்றம். அரங்கேற்றுபவன் வெண்பாப் புகழ் புகழேந்திப் புலவன் ஆவான் அரங்கேற்றும் நேரம்  அந்திப்பொழுதாக இருந்ததால்  புகழேந்திப் புலவனும் அந்த அந்திப் பொழுதைச் சிறப்பித