Skip to main content

Posts

Showing posts from November, 2020

நீர்நிலைகளின் பெயர்காரணங்கள்

நீர்நிலைகளின் பெயர்காரணங்கள்.  குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை) ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை) ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக) பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை) மடு கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை) மோட்டை அள்ளல் கிணறு துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை) தடாகம் அல்லது வாவி ஓடை அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்) அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் ) அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்) அகழி - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்) அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு.  தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது. இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர். கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை. கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை. சுனை - மலைப்பகுதி
 நானும் மகனும்  திருடர் - போலிஸ் விளையாட்டு விளையாடினோம்  திருடராய் மாறி ஒளிந்து கொண்டேன்  துப்பாக்கியை நீட்டியபடி  என்னை கண்டுபிடித்த அவன்  கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தமாதிரி  இரு கால்களையும் உதைத்து உதைத்து  சந்தோசக் களிப்பில் கூத்தாடுகிறான் என்னை அவன் கண்டுபிடித்த தருணத்தில்  நான் தொலைந்து போனது  அறியாமல்  -----கரிசல்நாடன் 

நினைவெல்லாம் மத்தாப் பூபூ

 👇👇👇👇👇👇👇👇👇 விடிகாலைத் தீபாவளிக்கு  முன்னதாக  தன் தாத்தா  சில பத்து ரூபாய்களுக்கு வாங்கித் தந்த பட்டாசுகளை  விடியும் முன்  நூறு முறையேனும்  எடுத்து எடுத்துப் பார்த்து  ஆனந்தம் கொள்ளும்  ஓர் கிராமத்துச் சிறுவனைப் போல்    என் இதயத்தில் இருக்கும் உன்னை    அடிக்கடி  வெளியே எடுத்துப் பார்த்து  மகிழ்ச்சிக் கொள்கிறேன். ....... கரிசல்நாடன் 
 மீள்பதிவு . தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !  அந்த வரிகள் . " தண்டவாளத்தில்  நீ  தலை வைத்து படுத்ததால்தான்  தலைவா ! இன்று தமிழ்  நிமிர்ந்து நிற்கிறது.   மேலும்,   அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன்  " இவன்  வெள்ளை யானைகளோடு  போராடிய போது  வீழ்ந்ததில்லை  கறுப்பு யானையோடு  கைகுலுக்கிய போதுதான்  காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின  ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  பிறகு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே அரண்டு போய் தமிழ

Teachers memes