குறள்கவிதை மங்கைகொண்ட காதலை மடைமாற்றலாம் என்று நினைக்காதீர் ! என் இதய வயலில் நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன் ! ஊரார் ஏளனப் பேச்சை எருவாக்கி தாயின் இடிச்சொல்லை நீராக்கி இதய வயலில் காதல் பயிர் வளர்க்கிறேன் ! பரிகாசம் பேசி காதல் பயிரை அழித்துவிடலாமென எண்ணாதீர் ! நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்க முயலாதீர் ! என் இதய வயலில் நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன் . கவிதையின் கரு ; ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் (குறள் எண்:1147) நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் (குறள் எண்:1148) வள்ளுவர் வரிகளுடன் ; சுரேஷ்மணியன் M A,