Skip to main content

Posts

Showing posts from December, 2019

சொல்லேருழவன்

வில்லேரருழவனும்,  சோல்லேருழவனும்.            சோழன் குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்,  அவன் பகைவனான மலையமானின் புதல்வர்களை யானைக்காலின் கீழ் கிடத்தி கொல்ல முயல்கிறான். தெருமன்றத்தில் வேடிக்கை காண மக்களும்  காத்து நிற்கின்றனர்.   மன்னனும் நிற்கிறான்.  யானையை விட்டு மிதிப்பதற்காக மலையமானின் குழந்தைகள் தரையிலே கிடத்தப்பட்டிருக்கின்றனர், எதிரே குன்றசைந்தாற் போன்று பட்டத்து யானையை பாகன் அழைத்து வருகிறான்,  மயான அமைதி அவ்விடத்தில் தம்மை மிதித்து கொல்ல வருவதையும் அறியா அம் மழலைகள் யானையை பார்த்து கை கொட்டி சிரிக்கின்றனர் . நெஞ்சை சுடும் இக்காட்சியை பார்த்த கோவூர்க் கிழார் எனும் பழந் தமிழ் புலவன் மன்னனை நோக்கி தன் கவி வாளை சுழற்றுகிறான். பாடல்     " நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை இவரே,புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர் களிறுகண்டு அழூஉம்  அழாஅல் மறந்த புன்தலைச் சிறா அர் மன்று மருண்டு நோக்கி விருந்திற் புன்கணநோ வுடையர், கேட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே !   பொருள் - (  மன்னனே நீ புறாவின் துயரத்தை மட