Skip to main content

Posts

Showing posts from April, 2020

நிலக் கடலை வரலாறு

வேர்க்கடலை அல்லது நிலக்கடலை என்றழைக்கப்படும் ஒரு தாவரம், தென் அமெரிக்காவிலுள்ள பிராஸீல் நாட்டிலிருந்து ஆஃப்ரிக்க ஆசிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தாவர வரலாற்றியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இது 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தது. ஆனாலும் இந்தியா முழுவதிலும் இது தீவிரமாகச் சாகுபடி செய்யப்பட்டது 20ஆவது நூற்றாண்டில்தான். உலகில் வேர்க்கடலை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஆண்டொன்றுக்கு சுமார் 70 லட்சம் டன் வேர்க்கடலை நம் நாட்டில் விளைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விளைக்கப்படுகிறது. ஆனால் பெருமளவில் எண்ணெய் ஆட்டும் இயந்திரங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தென் ஆற்காடு மாவட்டம்தான் இதன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ் நாட்டிலேயே பெரிய வேர்க்கடலைச் சந்தை விழுப்புரம்தான். தமிழ்நாடு வேர்க்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதற்கும், தமிழ்நாடும், குறிப்பாகத் தென் ஆற்காடும் கடலை எண்ணெய் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கவும் ஒரு தமிழர் காரணமாக இருந்திருக்கிறார் என்ற தகவல் உங்களுக்கு வியப்பைக் கொடுக்கலாம். தென் ஆற்காட