Skip to main content

Posts

Showing posts from December, 2020

தாத்தாவுக்கு

சரியாக நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்தது.......என் தாத்தா தமிழ் நாவல்கள் நிறைய படிப்பார், அவர் புத்தகம் படிக்கும் போது தொந்தரவு செய்தால் 50 பைசா அல்லது 1 ரூபாய் கொடுத்து என்னை வெளியேற்றுவார்,,,, இப்படியே தினமும் என் வருமானம் 2 ரூபாயை எட்டிவிடும்... பிற்கால சோழர்களின் எழுச்சியை இரவு நேரத்தில் கதையாக கூறுவார்,,,96 விழுப்புன் பெற்ற விசயாலய சோழன்,, திருப்புறம்பிய போரில் பாண்டியரை விரட்டியடித்தது,, இப்படியாக சுவைபட கூறுவார். அவரின் படுக்கையருகில் புத்தகங்கள் நிறைய இருக்கும்,,ஒருநாள் நான் "கோபல்ல கிராமத்து மக்கள் " என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன், அந்நாவலை படிக்க படிக்க சுவையாக இருந்தது,,,,அக்கதையும் மனதில் பதிந்து விட்டது,, கல்லூரியில் நான் முதுகலை தமிழ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது தாத்தாவின் உடல்நிலை சரியில்லை ,,அப்போதும் அவர் என்னிடம் கேட்ட புத்தகம் "கலைஞரின் "பொன்னர் சங்கர் " நானும் ஒரு நண்பரிடம் வாங்கி தந்தேன்,,அதை 2 நாளில் படித்து முடித்தார்,,,இன்னும் என்ன புத்தகம் உள்ளது என்று கேட்டார்,,நான் உடனே தலைவரின் "சங்கத்தமிழ் &qu

குறள்கவிதை

குறள்கவிதை  இப்பிறவியில் உனைவிட்டு பிரியமாட்டேன் என்று  அவளை இறுகத் தழுவினான், அவன் .  அவளோ! மறுபிறவியில்  நீ என்னை விட்டு  பிரிந்துவிடுவாயா ? என நினைத்து  கண் நீர் பொழிந்தாள்.                  கரிசல்நாடன்  இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்

காரியம் ஆக வேண்டும்னா, கழுதைக் காலை வேண்டுமானாலும் பிடி

காரியம் ஆகனும்னா...!? கழுதையானாலும் காலை பிடி...!!! கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன், மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்... இவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான். சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை. கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்... குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும். கம்சன் வந்து கொன்று விடுவான். இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன...  எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார்... உடனே தேவகி கணவன் வசுதேவன்... தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்... கழுதையும் கத்தவில்லை... கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!! கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது. சுரேஷ்மணியன் M A