சரியாக நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்தது.......என் தாத்தா தமிழ் நாவல்கள் நிறைய படிப்பார், அவர் புத்தகம் படிக்கும் போது தொந்தரவு செய்தால் 50 பைசா அல்லது 1 ரூபாய் கொடுத்து என்னை வெளியேற்றுவார்,,,, இப்படியே தினமும் என் வருமானம் 2 ரூபாயை எட்டிவிடும்... பிற்கால சோழர்களின் எழுச்சியை இரவு நேரத்தில் கதையாக கூறுவார்,,,96 விழுப்புன் பெற்ற விசயாலய சோழன்,, திருப்புறம்பிய போரில் பாண்டியரை விரட்டியடித்தது,, இப்படியாக சுவைபட கூறுவார். அவரின் படுக்கையருகில் புத்தகங்கள் நிறைய இருக்கும்,,ஒருநாள் நான் "கோபல்ல கிராமத்து மக்கள் " என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன், அந்நாவலை படிக்க படிக்க சுவையாக இருந்தது,,,,அக்கதையும் மனதில் பதிந்து விட்டது,, கல்லூரியில் நான் முதுகலை தமிழ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது தாத்தாவின் உடல்நிலை சரியில்லை ,,அப்போதும் அவர் என்னிடம் கேட்ட புத்தகம் "கலைஞரின் "பொன்னர் சங்கர் " நானும் ஒரு நண்பரிடம் வாங்கி தந்தேன்,,அதை 2 நாளில் படித்து முடித்தார்,,,இன்னும் என்ன புத்தகம் உள்ளது என்று கேட்டார்,,நான் உடனே தலைவரின் "சங்கத்தமிழ் "புத்தகம் கொடுத்தேன் ஆவலாக படிக்க ஆரம்பித்தார்,,ஆனால் அதற்குள்ளாகவே உடல்நிலை மோசமாகி ,,எங்கள் குடும்பத்தை விட்டு மறைந்தார்,,,,,,அவர் உயிர் பிரிந்த பிறகு அந்த புத்தகம் அவர் மார்பில் 1 நாள் துயில் கொண்டது,,,தற்போது அந்த புத்தகத்தை புரட்டும்போதெல்லாம் ...தாத்தா நினைவில் வந்து போகிறார், இந்த ஆண்டோடு 11 வருடம் ஆகிறது.
சுரேஷ் மணியன் M. A,
Comments
Post a Comment