Skip to main content

Posts

Showing posts from October, 2018

பைய பைய

அனைவருக்கு இனிய வணக்கம். அடியேன்  இரண்டொரு நாட்களுக்கு முன்னர்  ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலை மறுபடியும் படிக்க நேரிட்டது. அலைபேசியில்  வெற்றிலையில்  சுண்ணாம்பு தடவுவது போன்று  படிப்பதை விட,   இடது கையில் நூலைத் தாங்கி, வலக்கை நடுவிரலை நாவினில் தோய்த்து பக்கத் தாள்களை புரட்டியவாறு படிக்கிற  நூல் வாசிப்பு என்பதே ஒரு வித தனி சுகானுபவம்தான், அதிலும் இலக்கிய நூல் என்றால் மகிழ்ச்சி இன்னும் பன்மடங்கு பெருகத்தானே செய்யும். எல்லா காலத்திற்கும் பொருந்தி வரக்கூடிய கருத்துக்களை தாங்கிய நீதி நூல்கள் இன்றும் சற்றே நம்மை மிரள வைக்கின்றன,  விடயத்திற்கு வருகிறேன். தத்தனூர் எம்.ஆர் கல்லூரியில் தமிழிலக்கியம் படித்த காலத்தில்  கனகராஜ் என்கிற வயதில் எம்மைவிட மூத்த,  நெல்லைச்சீமையை சேர்ந்த நண்பர் எங்களோடு படித்து வந்தார் . அவரோடு நாங்கள் நட்பு கொள்கிற காலத்தில் அவரின் பேச்சு வழக்கு குறித்து அவரை நாங்கள் நையாண்டி செய்வோம். ஏளா!சுரேசு  நீ எப்ப காலேஸி வருத? மாப்ளே  இங்கனக்குள்ள வாலே  ! சுரேசு என்னடே பண்ணுத! அந்த வாத்திமாரு கிளாசு கடுப்பா இருக்குலே! கோட்டிப்பய கணக்கா  பொலம்புதான்.  படிச்ச பொறவு என்

வரலாறு பற்றி அதிகம் எமக்கு தெரியாவிட்டாலும், அதை அறிந்துகொள்ளவும், அதை மற்றவருக்கு தெரியப்படுத்தவும் அதிக ஆர்வமுண்டு. என்னுடைய பாட்டனார் ராஜகோபால் கொண்டியார் அதிக வரலாற்று நூல்களையே படிப்பார் அதைப் பார்த்து வளர்ந்த எனக்கு அந்த ஆர்வம் வந்துவிட்டது. எங்கள் ஊர் பெயர் சுத்தவல்லி சதூர்வேதிமங்கலம் ஆகும்.பிற்கால அதாவது முதலாம் இராஜேந்திர சோழனுக்கு பிறகான சோழப்பட்டத்தரசிகளில் ஒருவர் அது காலப்போக்கில் சுத்தமல்லி என ஆகிவிட்டது. எங்கள் ஊரில் ஒரு வரதராஜ பெருமாள் கோவில் ஒன்றுண்டு, கேட்பாரற்று ஒரே ஒரு பூட்டை மட்டுமே காவலாக கொண்டு இருந்த அந்தக் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் சிலைகடத்தல் மன்னன் கபூர் பல சிலைகளை கடத்திவிட்டான். அவன் மியூசத்தில் வைத்திருந்த அந்த சிலைகள் நூறு கோடி வரை ஏலம் போயிருக்கிறது, ஆனால் வாங்குபவர்களுக்கு ஒரு தயக்கம், அந்தச்சிலையின் அடிபீடத்தில் சுத்தவல்லி என்ற பெயர் இருப்பதுதான். எவ்வாறோ கபூரும் பிடிபட்டான்! எங்கள் ஊர் சிலைகளும், ஹீபராந்தக சதூர்வேதி மங்கலம் என்கிற திருப்புரந்தான் விநாயகர் சிலை உள்ளிட்ட அனைத்து சிலைகளும் சில தன்னார்வலர்களின் முயற்சியால் மீட்கப்பட்டு பிரதமர் மூலம் இந்தியா வந்தடைந்தனர். எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. ( எனக்கு மூன்று ஆண்டுகள் முன்பே தெரியும் ) இப்படியான எங்கள் ஊர் சுத்தவல்லியில் திருவிழாக்களின் போது சில வகையறா என்கிற தலைக்கட்டு அதாவது குழுப்பெயரில் மண்டகப்படி நடத்துவர். அருள்மிகு காளியம்மன் சாமிக்கு நகை போடுவது ஒரு வகையறா, பூ அலங்காரம் சூடுவது, சாமிசிலை ஏற்பது, சாமியை தாங்கி பிடிப்பது, திருக்குடை பிடிப்பது எல்லைக்கிடா வெட்டுவது என ஒவ்வொரு வகையறாக்களுக்கும் ஒதுக்கப்படும். அந்த கோர்ட் உத்தரவுப்படியான ஆவணம் என் பாட்டனார் கைவசம் இருபது ஆண்டுகள் இருந்தது. இப்படியான ஒரு வகையறா பாலதரியன், அவர்களின் உண்மையான பட்டப்பெயர் அடியேன் ஆய்ந்த அளவில் சொல்கிறேன் " பல்லவர் திரையோன் " அடுத்து சம்பன் வகையறா , மகோன்னதமான சோழ வரலாற்றின் இடத்தை பிடித்த குறுநில மன்னர்களான. "சம்புவராயர்கள் வகையறா " அடுத்து "சீப்பிலி வகையறா " சீட்புலியார் குறுநில மன்னர் வகையறா " நான் சார்ந்த "கொண்டி" வகையறா, என்பது கொண்டியார் என்ற குறுநில மன்னரின் பட்டப்பெயராகும். _____வரலாறு நீளும். சுரேஷ்மணியன் MA,

கொண்டியார் வகையறா