Skip to main content

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

நான் மூன்றாம் வகுப்பு  படிக்கின்ற காலகட்டத்தில் தெருவுக்கு இரண்டொரு வீட்டிலும் ,  டீக்கடையிலும் மட்டுமே வானொலி இருக்கும்.

அப்போது காலை வேளையில் ஒருவரின் பேச்சைக் கேட்பதற்காக ரோடியோ முன் நிசப்தமாக குழுமி இருப்பார்கள்.

ஒரு சிறிய கதை சொல்ல ஆரம்பித்து வாழ்வின் யதார்த்த போக்கினை இயல்பாக விளக்குவார் அவர்தான் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தின் கொள்ளிடக் கரையோரம் அமைந்துள்ள சிற்றூரான தென்கச்சிபெருமாள் நத்தம் ,தா.பழூரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

முழுக்க முழுக்க நெல் மட்டுமே விவசாயப் பயிர்.  அத்தகைய ஊரில் பிறந்தவர்தான்  தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஆவார். ரோடியோவில் அவர் குரலை கேட்கிற போதெல்லாம் நாமாக அவருக்கு ஓர் உருவம் அமைத்து நினைத்து பார்ப்பதுண்டு.

தொலைக்காட்சியில் இன்று ஒரு தகவல் என்ற தலைப்பில் அவர் பேசுவதை பார்த்த பிறகே அவரின் தோற்றமும் ,ஹாஸ்ய உணர்வை வெளிக்காட்டாமல், கேட்போரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பாங்கும் ஆச்சரியப்படுத்தியது.

நகைச்சுவை குறித்து அவர் கூறியதை கொஞ்சம் படீத்துப் பாருங்கள்.

ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்?
என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்காங்க.
ஆனா கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடுக்கற விளக்கம் என்ன தெரியுமா?

நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும்.அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அதுதான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் கொடுக்கிறார்.

ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும் போய்கிட்டிருக்காங்க....
வழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது.

ஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டு பக்கத்துலே இருந்த ஏரியிலே கை- கால் கழுவிக்கிட்டிருந்தார்.

உடனே அந்தப் பணக்காரப் பையனுக்கு ஒரு யோசனை!

அவன் சொன்னான்.
டேய்! இப்ப ஒரு வேடிக்கை செய்யலாம்... அந்தச் செருப்பு இரண்டையும் தூக்கி எட்டத்துலே வீசி எறிஞ்சிடுவோம். அந்த ஆளு வந்து பார்த்துட்டு செருப்பைத் தேடி அல்லாடுவான்... அங்கேயும் இங்கேயும் ஓடுவான். திருதிருவென முழிப்பான். அதை நாம இரசிக்கலாம். நல்லா தமாசா இருக்கும்! அப்படின்னான்.

இப்படிச் சொல்லிப்புட்டு அந்தச் செருப்புகளைத் தூக்கப் போனான்.

“கொஞ்சம் பொறு“ ன்னான் அந்த ஏழைப் பையன்.
ஏன்? ன்னு கேட்டான் பணக்காரப் பையன்
   இப்ப அந்த ஏழைப்பையன் சொன்னான்...

நீ சொல்றது ஒண்ணும் வேடிக்கை இல்லே.
உன்னோட செருப்புத் தெலைஞ்சா உன் அப்பா உடனே உனக்கு வேறே செருப்பு வாங்கிக்கொடுத்துடுவார்!
ஆனா அந்த ஆளுக்கு இந்தச் செருப்பு தொலைஞ்சா வேறே புதுசா வாங்குறதுக்கு வாயையும், வயத்தையும் கட்டி பணத்தைச் சேர்க்கவேண்டியிருக்கும்!

அதனால நான் ஒரு வேடிக்கை சொல்றேன். அது மாதிரிச் செய்! அது இன்னும் தமாசாக இருக்கும்.. அப்படின்னான்.

சரி! சொல்லுன்னான் இவன்.

“செருப்பு இரண்டும் அது இருக்கிற இடத்துலேயே இருக்கட்டும். உன் சட்டைப் பையிலேயிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்தச் செருப்பு மேலே அதோட குதிப் பகுதியிலே வை. வச்சுட்டு நாம ரெண்டு போரும் அந்த மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சி நின்னுக்குவோம்.“ அப்புறம் பார் வேடிக்கையைன்னான்.

அதே மாதிரி ஒரு ரூபாய் காசை செருப்பு மேலே வச்சிட்டு இவங்க மறைஞ்சு நின்னுக்கிட்டாங்க.

கொஞ்ச நேரத்துல அந்த விவசாயி வந்தார்.

கால்லே உள்ள மண்ணைத் தட்டிப்புட்டு செருப்பை மாட்டறதுக்குப் போனார். அங்கே இருந்த காசு கண்ணுல பட்டுது! அவருக்கு ஆச்சிரியமா போச்சு. அதை கையிலே எடுத்துப் பார்க்கிறார். நாலுபக்கமும் திரும்பி திரும்பிப் பார்க்கிறார். கடைசியிலே ஆகாயத்தைப் பார்க்கிறார்.

ஆண்டவா! இது உன்னோட கருணைதான்..
நீதான் யாரோ புண்ணியவான் மனசுல தருமம் பண்ணற எண்ணத்த உண்டாக்கியிருக்க! அந்தப் புண்ணியவான் நல்லாயிருக்கனும்! ன்னு வாழ்த்தி அந்தக் காசைக் கண்ணுல ஒத்திக்கிட்டார்.

மறைஞ்சிருந்து பார்த்திட்டிருந்த ஏழைப் பையன் இப்பச் சொன்னான்...

பார்த்தியா..? உன்னைப் புண்ணியவான்னு வாழ்த்திட்டுப் போறார் அந்த ஆள்! அவருக்கும் சந்தோசம். உனக்கும் சந்தோசம். உனக்கு ஒரு ரூபாய்ங்கறது பெரிசில்ல. அதனால நமக்குக் கிடைச்சிருக்கிற மகிழ்ச்சி ரொம்ப உயர்வானது! அப்படின்னான்.

வேடிக்கையும் கிண்டலும் இது மாதிரி அடுத்தவங்களுக்கு இடைஞ்சலா இல்லாம இருக்கனும் என்கிறார் கலைவாணர்.

ஆனா பாருங்க.. அவருக்கே இடைஞ்சலா வர்ற விசயங்களைக் கூட அவரு வேடிக்கையாத்தான் எடுத்துக்கறார்.

ஒரு தடவை ஒருத்தர் கலைவாணர்க்கிட்டே வந்து...
ஐயா... என் குழந்தை செத்துப் போச்சு! ன்னு சொல்லி அழுதார். உடனே இவரு அவருக்கு நூறு ரூபாய் பணம் கொடுத்து “இந்தாங்க... அடக்கம் செய்யுங்க!ன்னு சொல்லி அனுப்பிவைச்சார்.

ஒரு வருசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். இவறு மறந்திருப்பார்ங்கற நினைப்பிலே “ அண்ணே...
என் குழந்தை இறந்து போச்சண்ணே! ன்னார் இவரு மறுபடியும் நூறு ரூபாய் கொடுத்து ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

ஏழெட்டு மாசம் கழிச்சு மறுபடியும் அதே ஆள் வந்தார். அவரு வாயைத் திறக்கறதுக்க முன்னாடியே இவரு நூறு ரூபாயை அவரு கையில வெச்சு

“போன ரெண்டு தடவைதான் குழந்தை செத்துப்போச்சு“ 

இந்தத் தடவையாவது சாகாமக் காப்பாத்திடுங்க! ன்னார்.

அதுக்கப்பறம் அந்த ஆள் வர்றதே இல்லையாம்.

தமிழோடு உறவாடும் ; சு.சுரேஷ் மணியன் MA,

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விளக்கவே , அரண்டு போய் தமிழ

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திண்ணை

காணாமல் போன திண்ணை. அனைவருக்கும் இனிமையான வணக்கம். இன்றை நவநாகரீக தமிழரின் வாழ்வியல் பயன்பாட்டிலும், அடித்தட்டு சமூக மக்களின்,  கிராமிய வாழ்க்கை பயன்பாட்டிலும் அவர்களாகவே வலிந்து தொலைத்துக் கொண்டிருப்பது " திண்ணை " என்றுதான் சொல்ல வேண்டும். காணாமல் போன தமிழரின் கருவிகளாக  முதன்மையானதாக - அம்மிக்கல்லையும் - மாவு அரைக்கும் குடைக்கல்லையும் -உரலையும் உலக்கையையும் சேர்த்துக்கொள்ளலாம். அரிதினும் அரிதாய் மேற்சொன்ன அடுதலுக்கு ( சமையல் செய்ய உதவிய பொருள்கள் ) பயன்பட்ட பொருள்களை சில கிராமங்களில் பயன்பாட்டில் இருப்பதை காணும் போது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியும், பெருமிதமும் தோன்றும். அத்தகைய காணாமல் போன பட்டியலில் நம்மவர்கள் திண்ணையையும் சேர்த்துவிட்டார்கள். `` திண்ணை " இது தமிழரின் வீட்டின் முன்பகுதியில் நிலைக்கதவு எனும் வாசற்படியின் நடைபாதையின் இருமருங்கிலும் ஒன்றரை அடி முதல் உயரம் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும். திண்ணை பள்ளிக்கூடம், திண்ணைப்பேச்சு, திண்ணையிலே கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துதான் வாழ்க்கை எனும் சொற்கள், சொலவடைகள்  வழி திண்ணையின் பயன்பாட்ட