எம்.ஆர்.கல்லூரியில் தொல்காப்பியா் மன்ற தொடக்க விழா

உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்காப்பியர் மன்ற தொடக்க விழா நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.இரகுநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆலோசகர் முனைவர் தங்க.பிச்சையப்பா, கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சேகர் முன்னிலை வகித்தார்.
தமிழாய்வுத் துறை தலைவர் சாமிநாதன் மற்றும் மூத்த பேராசிரியர் பழனியாண்டி, கல்வியியல் கல்லூரி ஆலோசகர் வரதராசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு பேராசிரியர் சுரேஷ் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறை முனைவர் அ.சிவபெருமான் அவர்கள் தொல்காப்பியர் மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரையில் தொல்காப்பியம் ஓர் அறிவியல் அளவிலான இலக்கணநூல், வணிகம் செய்கின்றவர்க்கம் இலக்கணம் சொன்ன நூல் எல்லோரும் கற்கவேண்டிய நூல்.

முதன் முதலாகத் தொல்காப்பியர் விருது பெற்றவர் அடிகளாசிரியர் ஆவார். அவருக்கு அப்போது வயது 100தாண்டியிருந்தது. தொல்காப்பியம் ஒரு தொகுப்பு நூல். ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்டது. ஏறக்குறைய1610 நூற்பாக்கள் கொண்டது என்றும் கூறினார்.
தொல்காப்பியத்தில் இடைச்சொற்கள் பற்றிய ஆய்வும் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். குறிப்பாக மாணவர்கள் தொல்காப்பிய ஆய்வு பற்றி பங்குகொள்ள வேண்டும். அதற்குப் பேராசிரியர்கள் உறுதுணையாக இருந்து உதவி செய்திடவேண்டும் என்று கூறினார். மேலும் பேராசிரியர் முனைவர் மு.இளையபெருமாள் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் இறுதியில் பேராசிரியர் முனைவர் கு.வேல்முருகன் நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Comments
Post a Comment