திருவள்ளுவர் ஓர் நாள் ஆறாயிரம் ரூபாய்க்கு
ஓர் ஆண்ராய்டு போனை வாங்கி
வொய்பை அழைத்து வைபை
முடுக்க சொல்லி
வாட்ஸ்அப்பில் ஒரு குரூப்பை தொடங்கி
குறளை பதிவிட்டு வந்தார்.
ஓர் ஆண்ராய்டு போனை வாங்கி
வொய்பை அழைத்து வைபை
முடுக்க சொல்லி
வாட்ஸ்அப்பில் ஒரு குரூப்பை தொடங்கி
குறளை பதிவிட்டு வந்தார்.
இவர் " நீரின்றி அமையாது உலகு " என்றார்
சட்டென்று ஒரு விடலை
" பீரின்றி அமையாது உலகெனச் (chat )சாட்டியது.
சட்டென்று ஒரு விடலை
" பீரின்றி அமையாது உலகெனச் (chat )சாட்டியது.
கோமான் என்பான் குறுக்கே வந்து
பெருசு ,உடையார்கள்தான் அறிவாளிகளாக இருப்பார்களா ? என்றுச் (Chat )சாட்ட
பெருசு ,உடையார்கள்தான் அறிவாளிகளாக இருப்பார்களா ? என்றுச் (Chat )சாட்ட
உனக்கேன் இந்த அபத்தமான
ஐயம் என்று முறைக்கும் முக ஸ்டிக்கரை இவர் அனுப்ப,
ஐயம் என்று முறைக்கும் முக ஸ்டிக்கரை இவர் அனுப்ப,
" அறிவுடையார் எல்லாம் உடையார் "
என நீதானே சொன்ன பெருசு என்று
நாக்கினை கடிக்கும் ஸ்டிக்கரையும் சேர்த்து அனுப்பினான்.
என நீதானே சொன்ன பெருசு என்று
நாக்கினை கடிக்கும் ஸ்டிக்கரையும் சேர்த்து அனுப்பினான்.
மீண்டும் வொய்பை அழைத்தார்
ஆண்ராய்டு அடுப்போடு சாம்பலாயிற்று
ஆண்ராய்டு அடுப்போடு சாம்பலாயிற்று
தாடியை நீவியவாறே
பனைமரம் நோக்கி போனார்.
பனைமரம் நோக்கி போனார்.
----சு.சுரேஷ்மணியன். M A
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தற்போதைய சமூக நிலையை சரியாகக் கூறும் பதிவு.
ReplyDelete