10.48மணிக்கு நியூஸ் தமிழ் செய்தி சேனலை பார்த்துக் கொண்டிருந்தேன் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தன்னை காதலித்து திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணோடு விமானத்தில் இறங்கி வருவதை அறிந்து அவர்களுடன் தகராறு ஈடுபட்டார் அந்த பெண்மணி. இந்நிகழ்வை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது அல்லது கேட்டபோது எனக்கு சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் தமிழ் படித்ததால் அநேக வேலைகளில் கேட்கும் ஏதோ ஒரு செய்திகள் அல்லது பார்க்கும் ஒரு காட்சிகள் எனக்கு திடீரென சங்க இலக்கியத்தை நினைவூட்டும் ஏனென்றால் நான் தமிழ் படித்த ஒரு சுரேஷ்
“பூத்த பொங்கர்த் துணையுடன் வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும்...”
( அகநானூறு- 4 )
தன்னுடைய காதல் அதாவது தலைவன் வினைபொருட்டு அதாவது பணம் ஈட்டுவதற்காக அல்லது அல்லது அரசனுக்கு போரின் பொருட்டு உறுதுணையாக ஒரு துணையாக தன்னுடைய காதலியாகிய தன்னுடைய தலைவியை அவன் பிரிந்து சென்று விட்டான்.
மீண்டும் அவன் வரும் காலத்தை நினைத்து என்று? வருவான் .எப்போது வருவான்? என்று நினைத்து காத்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு அவளது தோழி பின்வருமாறு கூறி ஆற்றுப்படுத்துகிறாள்
அதாவது, சோலையில் தன் துணையோடு இன்புற்றிருக்கும் வண்டு, தேன்
உண்ணும் போது, அவை தன் தேர்மணியோசைக்கு பயந்து விடுமோ என்றஞ்சி, மணியின் நாவை ஓசை எழாத வண்ணம் இழுத்துக்கட்டும் மாண்புடையவனா
ம் அந்தத்தலைவன். அப்படிப்பட்டவன் உன்னை தவிக்கவிட்டு வாராதிருப்பானா? விரைவில் வந்துவிடுவான் என்கிறாள் தோழி அந்த தலைவியிடம் அதாவது அந்த பெண்ணிடம்.
அதாவது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த மொழியான தமிழ் மொழியில் ஒரு இலக்கியத்தில் தன்னுடைய காதலியை காண வரும் அந்த தலைவன் தான் வருகின்றபோது தேரில் இருக்கக்கூடிய மணி நாவானது அந்த மணியில் அசைந்தால் ஓரு ஓசை வரும் என்று அங்கே மனதில் நினைத்தான் தேன் அருந்தி கொண்டிருந்த கொண்டிருக்கும் அந்த வண்டுகள் அதாவது இணையான ஜோடி வண்டுகள் பிரியக்கூடாது என்று எண்ணி தன்னுடைய தேரின் நாவை கட்டிக்கொண்டு வரக்கூடிய அந்த மாண்பு அந்த அத்தகைய தலைவன் வாழ்ந்திருக்கிறான் அல்லது வந்து கொண்டிருக்கிறான் எனவே உன்னை காண்பான் என்று தோழியே அறிந்து அதனை தன்னுடைய தலைவிக்கு சொல்கிறாளே அந்த மாண்பை நினைக்கின்ற போது தற்காலத்தில் காதலித்து அல்லது காதலிக்கின்ற போது திருமணம் செய்த பிறகு அல்லது திருமணம் நடக்கின்ற பொழுது தன்னுடைய துணையை திடீரென கழற்றிவிட்டு வேறு ஒருவரை காதலிக்கவும் அல்லது திருமணமும் செய்யக்கூடிய ஒரு தமிழ் மகன் அல்லது தமிழ் மகளை பற்றிய செய்திகளை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
சுரேஷ் மணியன்M A, (alias )கரிசல் நாடன்
Comments
Post a Comment