Skip to main content

நான் ஏன் தமிழ் படித்தேன்?

நான் ஏன் தமிழ் படித்தேன் ?

எதனால் தமிழ் பாடத்தை தேர்வு செய்தேன் ?

 இது போன்ற இன்ன பிற கேள்விகளும் தூக்கமில்லா இரவுகளில் எனக்குள் நானே எழுப்பி கொள்வதுமுண்டு. 

அப்போ நான் பத்தாவது படிக்கறச்சே,  கேபிள் கனெக்ஷன் கிராமத்தை எட்டிப் பார்க்காத அந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி சேனல் மட்டுமே வாய்த்தது.

ஞாயிறு மாலை மட்டுமே திரைப்படம் போடும் முன்னதாக, வசந்த் &கோ நிறுவனம் வழங்கும் " சாப்பிடலாம் வாங்க " என்கிற சமையல் நிகழ்ச்சியின் முடிவில் சமைத்த பதார்த்தங்களை உண்டு ருசி பார்த்து பரிசு தர வருவார் அமரர் வசந்தகுமார் அவர்கள்.  அப்போது அந்நிகழ்ச்சியின் நெறியாளர் வசந்தகுமாரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்  . 

நீங்கள் ஒரு தொழிலதிபர் ஆகாவிட்டால், வேறு என்னவாக ஆகியிருக்க ஆசைப்பட்டிருப்பீர்கள் ?  என்று,

வசந்தகுமார் கூறினார் " நான் தமிழ் படித்து ஒரு தமிழ் பேராசிரியராக ஆகியிருப்பேன், எனக்கு கம்பனின் ராமகாதை மிகவும் பிடிக்கும்  ராமன் நாடு துறந்து காடேகும் நிகழ்வை கம்பர் பாடுவார் 


சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரி விற்கை இளையவன் முன்செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? 

இந்த கம்பனின் ராமகாதையை கவிஞர் வாலி அவர்கள் அவதாரப்புருஷன் என்கிற தலைப்பில் வசன கவிதை நடையில் எழுதியுள்ளார் .மேற்கண்ட பாடலை கவிதை வடிவில் எழுதுகிறார் 

கங்கைக் கரையில் 
காலைக் கருக்கலில் 
கொழுநன் முன்செல 
கொழுந்தன் பின்வர 
இருவர்க்கும் இடையில் 
ஒரு கொழுந்து வெற்றிலை எழுந்து நடந்தாற் போல் 
நடந்தால் 
மரவுரி இடையில் ஏந்திய ஏந்திழை சீதை. " 

என்று பதில் கூறினார். 

ஆக இதுபோன்ற உளிகள்தான் பாராங்கல்லாய் இருப்பவனை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியது,கம்பனை நோக்கி வழிகாட்டியது,  எனலாம் .

சுரேஷ் மணியன் M, A.

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...