தமிழ் என்ற சொல்லை நாம் உச்சரிக்கும் போது எத்தைகய இனிமை இருக்கிறதோ, அது போல "கம்பர் " என்ற சொல்லை உச்சரிக்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும், இறுமாப்பும் எனக்கு ஏற்படுவது உண்டு. அதிலும் தமிழ் கடல் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கம்பனை, அவன் பாடல்களை விளக்கும் போது மனம் குதூகளிக்கும் . கண்ணதாசன் உள்ளிட்ட பல கவிஞர்களின் எழுத்து வண்டி ஓடியதே, கம்பனின் கவிதைகளை அதன் சாரத்தை அவர்கள் கடன் வாங்கிக் கொண்டதால்தான். இது முற்றிலும் உண்மை, அதை கவியரசு கண்ணதாசனே கூறியிருக்கின்றார். சரி விடயத்திற்கு வருகிறேன் புலவர்களின் பாடக்கருத்தை விளக்கும் உரைகளான தெளிவுரை, நயவுரை, பொழிப்புரை என்பன போன்றவைகள் புலவன் கூறவந்த உண்மையான கருத்தை படிப்போருக்கு விளக்குகிறதா ? என்றால் ஆம் என்று நிச்சயம் கூறிவிட முடியாது. ஏனெனில் ? யானையை தடவி பார்த்த குருடர்களின் கதை போன்றுதுதான் , யானையின் வாலை பிடித்து பார்த்த குருடன் யானை என்பது மெல்லியதாக நீட்டமாக இருக்கும் என்றும், மற்ற ஒரு குருடன் யானையின் காலை பிடித்து பார்த்து ய...