உலகில் தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்ல ஒரு சராசரி நபர் என்ன செய்ய முடியும்? வேண்டும் ? என்ற கேள்வி உனக்குள்ளே எழுமானால் , அதற்கான பதில் இதோ ! பிரபல கியூபா எழுத்தாளரான ஜோஸ் மார்டி ஒவ்வொரு மனிதனும் இறப்பதற்கு முன்பாக, பின்வரும் விஷயங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவையாவன; Have a child, Plant a tree, Write a book - Jose Marti ஒரு குழந்தை பெற்றுக் கொள், ஒரு மரத்தை நடு, புத்தகம் ஒன்றை எழுது - ஜோஸ் மார்டி குழந்தையைப் பெற்றுக் கொள்வதன் மூலம், அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதன் மூலம், சமுதாயத்திற்கு நல்லதொரு குடிமகனை உருவாக்கிக் கொடுக்கிறார். அந்த குழந்தை, சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மரத்தை நடுவதன் மூலம், உலகம் பசுமையாக தொடர்ந்து இருப்பதற்கான தனது பங்கினை விட்டுச் செல்கிறார். பல தலைமுறைகளுக்கு, அந்த மரம் தனது கனிகளை கொடுக்கும். நிழல் கொடுக்கும். ஆக்ஸிஜனை பரப்பும். மழையை கொண்டுவரும். பூமி வெப்பமடையாமல் காக்கும். புத்தகம் ஒன்றை எழுதுவதன் மூலம், தனது அறிவனை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டுச் செல்கிறார். அவர்கள் அதனைப் பயன்படுத்தி, இன்னும் மேன்மேலும், அறிவனை வளர்...