Skip to main content

Posts

Featured post

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.
Recent posts

தமிழ்

10.48மணிக்கு நியூஸ் தமிழ் செய்தி சேனலை பார்த்துக் கொண்டிருந்தேன் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தன்னை காதலித்து திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணோடு விமானத்தில் இறங்கி வருவதை அறிந்து அவர்களுடன் தகராறு ஈடுபட்டார் அந்த பெண்மணி. இந்நிகழ்வை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது அல்லது கேட்டபோது எனக்கு சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் தமிழ் படித்ததால் அநேக வேலைகளில் கேட்கும் ஏதோ ஒரு செய்திகள் அல்லது பார்க்கும் ஒரு காட்சிகள் எனக்கு திடீரென சங்க இலக்கியத்தை நினைவூட்டும் ஏனென்றால் நான் தமிழ் படித்த ஒரு சுரேஷ் “பூத்த பொங்கர்த் துணையுடன் வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் தோன்றும்...” ( அகநானூறு- 4 ) தன்னுடைய காதல் அதாவது தலைவன் வினைபொருட்டு அதாவது பணம் ஈட்டுவதற்காக அல்லது அல்லது அரசனுக்கு போரின் பொருட்டு உறுதுணையாக ஒரு துணையாக தன்னுடைய காதலியாகிய தன்னுடைய தலைவியை அவன் பிரிந்து சென்று விட்டான்‌. மீண்டும் அவன் வரும் காலத்தை நினைத்து என்று? வருவான் .எப்போது வருவான்? என்று நினைத்து காத்துக் கொண்டிருக்கும் தல...

அவளுக்கு

மறுபிறவியிலேனும்  மனைவியாக வாய்ப்பளா ? என் முதல்காதலி      அவள் நினைவுகளை  சுமந்து சுமந்து  நெஞ்சம் நோகிறது  புகைப்படத்தைப் பார்த்து பார்த்து  கண்கள் கசிகிறது  வடக்கில் இருந்து வரும்  வாடைக்காற்றோ  வாட்டித் தொலைக்கிறது  ஒற்றை மாடு பூட்டப்பட்ட  வண்டிகாரன் நிலையில்  வாழ்ந்து கழிக்கிறேன்  இருந்து அல்ல.

க.சொ.க

திருமணம் நடக்கப் போகிறது அந்த இளம் பெண்ணுக்கு, அவளுடைய தாய் தன்னால் முடிந்த அளவு உழைத்த பணத்தைக் கொண்டு, தன் மகளுக்கு சீரும் சிறப்புமாக மணமுடித்து வைக்க தயாராகிறாள்  அந்த தாய்.    மணமேடையில்  மணமகன் ,மணமகளின் கழுத்தில்   மங்கல நாண் அணிவிக்கப் போகிறான். அந்தத் தாயோ மணமக்களுக்கு முன்னே, அருகிலோ நிற்க முடியாத சூழல். ஏனெனில் அந்தத் தாயின் கணவனோ  ஓராண்டுக்கு முன் மறைந்து விட்டார்.  அதனால் அவள் திருமணப்பந்தலுக்கு , வெளியே ஓர் புறத்திலே ,பக்கவாட்டில் வேயப்பட்ட கீற்றை விளக்கி அந்த நிகழ்ச்சியை கண்கள் கசிந்தவாறு, கண்ணார தன் மகளின் திருமணத்தை பார்த்தாளாம். இந்த நிகழ்வு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஓரிடத்திலே அவரது " நெஞ்சுக்கு நீதி "நூலில் படித்திருக்கிறேன். அதே போல ,அதே சூழல்தான் ,தற்போது எனக்கும், பழூர் 03.03.2025 திங்கள் மாலை அ(இ)ன்று இந்நிகழ்ச்சி என்பதை கட்செவி புலனஞ்சல், முகநூலிலும் பார்க்கிறேன் அனைத்துப் பொறுப்பாளர்களின் பெயர்களைப்  ( Responsibility given by the party ) மாவட்டப் பிரதி என்ற சொல்லைப் படிக்கிற போது ஆண்டு 2010 க்கு சிந்தைக்குள்...

புளியமரம்

கரையோர புளியமரம் எங்க ஊரு ஆண்டேரிக் கரையோரம்  எங்களுக்கோ !   இரண்டு வீட்டுக்கும் பொதுவான ஒரு புளியமரம். முப்பாட்டன் வச்ச மரம்  மூன்றுத் தலைமுறையின்  காலடித்தடம் பட்ட இடம் குளிக்க வரும்  சிறுசுகளால்  புளிப்பான பழத்துக்காய்  கல்லடி பட்ட மரம்.  தாடிவீட்டுப் படித்துறை கரையோரம்  செழிப்போடு வளர்ந்த மரம் இடுப்பழகி நடிகை போல கொஞ்சம்  கிழக்கு நோக்கி அது  சாஞ்சிருக்கும் . பொன்னிறமாய் பூ பூக்கும்  பார்ப்போர் ரெண்டு கண்ணும் அந்த அழகில்  சொக்கி நிற்கும்  பூவோடு சேர்ந்த இளம்பிஞ்ச கடைவாயில் கடிச்சாக்க நாவரும்பு புளிப்பாலே வெட்கப்படும்  பூ கொஞ்சம்,பிஞ்சாகி , வந்த பிஞ்சு கொஞ்சம் காயாகி , காயில் கொஞ்சம் பழமாகி , அறுவடைக்கு காத்து நிற்கும் அந்த அறுவடை திருநாளுக்காய்  பொடுசுக நாங்க காத்திருப்போம் . சின்ன அப்பாயி தலைமையில  சொந்தகார குட்டாறு பெரியப்பா புளியம்பழம் உலுக்கையில  ரெண்டு சணல் கோணி கொண்டு போவோம் விழும் பழம் பொறுக்கிப்போட நாலு சின்னக்கூடையும் கொண்டு போவோம் . உலுக்கிய பழம் சேகரித்து  முட்டாக கொட்டி வைப...

களவும் கற்று மற

களவும் கற்று மற.! திருட்டையும்  கற்றுக் கொண்டு மறந்து விடு. என்றா ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டு வரையறை செய்யவியலாத நம் மூத்த தமிழினமா சொல்லியிருக்கும் ?   நிச்சயம் கனப்போதும் வாய்ப்பில்லை.  பொருளை மாற்றிப் புரிந்து கொள்வது நம் தவறே. ஆம் பழந்தமிழ் சங்கத் தமிழரின் வாழ்வியல் முறை  இரு பகுதியாக பகுக்கப் பட்டிருந்தது.  முன்னது ( திருமணத்திற்கு  முன் ) களவு வாழ்க்கை , பின்னது ( தி பி) கற்பு வாழ்க்கை.   மனமொத்த உரிய வயதினையடைந்த ஆணோ, பெண்ணோ தனக்கோ பிடித்தவரை காதல் செய்து, பிறகு ,அது ஊராருக்கு அம்பலாகவும் ,அலராகவும் பரவுதல் அறிந்து அச்செய்தி தோழி மூலமாக செவிலிக்கு சொல்லி (இங்கு செவிலி என்பது Nurse அல்ல, வளர்ப்புத் தாய்) செவிலி நற்றாய்க்கு சொல்லி ( நற்றாய் எனில் நாற்றங்கால் அல்ல, பெற்றத் தாய்) நற்றாய் இல்லாரிடத்தில் ( ஒன்றும் இல்லாதவர் என்று பொருள் அல்ல,வீட்டார்) கூறி திருமண ஏற்பாட்டுக்கு இசைவு  தெரிவிப்பார்கள். பிறகு அந்த தலைவன் பெண் கேட்டு வருவான், பிறகு திருமணம் செய்து வைத்து கற்பு வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள். இங்கே கற்பு எனப்ப...

தாத்தாவுக்கு

சரியாக நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது நடந்தது.......என் தாத்தா தமிழ் நாவல்கள் நிறைய படிப்பார், அவர் புத்தகம் படிக்கும் போது தொந்தரவு செய்தால் 50 பைசா அல்லது 1 ரூபாய் கொடுத்து என்னை வெளியேற்றுவார்,,,, இப்படியே தினமும் என் வருமானம் 2 ரூபாயை எட்டிவிடும்... பிற்கால சோழர்களின் எழுச்சியை இரவு நேரத்தில் கதையாக கூறுவார்,,,96 விழுப்புன் பெற்ற விசயாலய சோழன்,, திருப்புறம்பிய போரில் பாண்டியரை விரட்டியடித்தது,, இப்படியாக சுவைபட கூறுவார். அவரின் படுக்கையருகில் புத்தகங்கள் நிறைய இருக்கும்,,ஒருநாள் நான் "கோபல்ல கிராமத்து மக்கள் " என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன், அந்நாவலை படிக்க படிக்க சுவையாக இருந்தது,,,,அக்கதையும் மனதில் பதிந்து விட்டது,, கல்லூரியில் நான் முதுகலை தமிழ் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது தாத்தாவின் உடல்நிலை சரியில்லை ,,அப்போதும் அவர் என்னிடம் கேட்ட புத்தகம் "கலைஞரின் "பொன்னர் சங்கர் " நானும் ஒரு நண்பரிடம் வாங்கி தந்தேன்,,அதை 2 நாளில் படித்து முடித்தார்,,,இன்னும் என்ன புத்தகம் உள்ளது என்று கேட்டார்,,நான் உடனே தலைவரின் "சங்கத்தமிழ் ...