"" தீர்ப்பு '' பொழுது சாயுற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடிதான், வயதான ஒண்டிக் கட்டையான தனக்கு ஒதுக்கியிருந்த ஆண்டேரிக்கு தெக்குபக்கமுள்ள தன்னுடைய வயக்காட்டில் ஊனியிருந்த மொளகாய் கன்றுகளை பார்த்துட்டு, " நாளைக்கு காலையில் சின்ன ஓடையிலிருந்து தண்ணி மொண்டு மொளாக் கன்னுக்கு குழித் தண்ணி ' ஊத்தியாகணும் என்ற முடிவோடு, எப்போதும் தான் குளிக்கிற, தாமரைக்கொடி மண்டிக் கிடக்கும் ஆண்டேரிக்கரை மாது ஊட்டுத்துறைக்கு வந்து சேர்ந்தார் நம்ம கிருஷ்ண படையாச்சி. அந்த ஊரு பிறை நிலா வடிவான தாமரைக்கொடி நிறைந்தஆண்டேரியில் ,சிமெண்ட் படிக்கட்டுகள் அமைக்கப்படாத அந்த நாளில் குளிக்கக் கூடிய ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பேரு புழக்கத்தில் இருந்தது. ஏரிக்கு வடமேற்கே அரசமரம் பக்கத்தில் உள்ள குளியல் துறைக்கு மனியாரு ஊட்டு துறை என்று பெயர் , ஏன்னா ? அந்த குளியல் துறைக்கு மேற்கு பக்கத்தில் மணியார் குடும்பத்து சின்னசாமி வீடு இர...