நீர்நிலைகளின் பெயர்காரணங்கள். குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை) ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை) ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக) பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை) மடு கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை) மோட்டை அள்ளல் கிணறு துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை) தடாகம் அல்லது வாவி ஓடை அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்) அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் ) அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்) அகழி - கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்) அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது. இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர். கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை. கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை. சுனை - ம...