_ போய் வா தங்க நிலாவே ! _ " பாடும் நிலாவே 'பாடிய நீ இன்று பாட மறுப்பதென்ன ! " குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற ஒலகம் ' என்று பாடிய நீ எங்களை தவிக்கவிட்டு கூண்டோடு பிரிந்ததென்ன ! இந்திர உலக இளசுகளின் நடனத்திற்கு பின்பாட உன் தேன் நா உடன் கொண்டு பிரிந்தாயோ ! மாத்திரை அளவும் மாறாமல் தமிழ் அறிந்து பா பாடும் உன்னை தன் விருத்தப்பா நீ பாட என் பாட்டன் கம்பன் அழைத்தானோ ! கோடம்பாக்கத்து கூத்தர்களை புகழ்ந்தது போதும் என்றெண்ணி கவிராட்சசன் ஒட்டக்கூத்தன் நினைத்தானோ ! தன் சிந்துக்கு நீ குரலிசைக்க வேண்டி எட்டயபுர கவிராஜன் பாரதி அழைப்பு விடுத்தானோ ! ஆறடி கரும்பை காற்படி சாறாக்கி கவிச்சாறு பிழிந்து வைத்து உனக்காக காத்துகொண்டிருந்த கவியரசு கண்ணதாசன் உனக்கு வருகை மடல் வரைந்தானோ ! சத்தான தமிழில் முத்தான சொல்கொண்டு கல்கண்டு நிகர் கவியெழுதி வைத்திருக்கும் அண்ணன் முத்துக்குமார் உன்னை வாவென பகர்ந்தானோ ! அரிதார முகங்களை பாடியது போதுமென அவதார நாயகர்களை ...