Skip to main content

Posts

Showing posts from May, 2020

சுத்தமல்லி

இன்று பள்ளிகளில் தேசிய கீதம் பாடுவது போல் என் ஊரான சுத்தமல்லியில் ஜம்பது வருடங்களுக்கு முன்னால் தேசிய கீதத்திற்கு முன் ஒரு கிராம கீதம் பாடுவார்களாம்,  அந்த பாடலை என் தந்தை கூற கேட்டுள்ளேன். ஆனால் அந்த பாடலின் ஆசிரியன் யார் என தெரியவில்லை. " எங்கள் ஊர் சுத்தமல்லி விளையும் பயிர் கொத்தமல்லி வடபாகத்தில் கருங்காடு மேல்பாகத்தில் மணல் காடு தென்பாகத்தில் செம்மண் காடு கோடை நாளில் கொத்தி நிலத்தை சீர் செய்வோம் ஆடி மாதம் விதைத்திடுவோம் ஐப்பசிக்கு முன் அறுத்திடுவோம் நாங்கள் பள்ளிக்கூடம் செல்லவே பாலும் சோறும் உண்ணவே எங்கள் அம்மா அப்பா காட்டிலே அலுத்து அலுத்து உழைக்கின்றார் எங்கள் ஊர் சுத்தமல்லி விளையும் பயிர் கொத்தமல்லி. இப்பாடலின் ஆசிரியர் யாரோ  !!!

கொரோனா ( கொ.பி. )

வறியவன் வீட்டு அடுப்பைப் போல வெறுமனே நீண்டு கிடந்திருந்த தண்டவாளங்களின் மீது ட்டுடுக் ட்டுடுக்  என  ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்     முத்தமிட்டு விருட்டென பிரியும் காதலனைப் போல தரைக்கு முத்தமிட்டு விமானங்கள் மேல் நோக்கிப் பறக்கத் தொடங்கும் வெற்றிலை குதறிய வாய்களை போல கரிவாயுவை உமிழ்ந்தவாறே கனரக வாகனங்கள் இரையத் தொடங்கும்    கதைகளில் கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில் திண்ணைகள் என கொரோனா பேசுபொருளாகி கடந்துவந்ததை அசை போட்டு பார்க்க வைக்கும் ஆறுகளின் கர்ப்பத்தை அழித்து மணல் குருதிகள் அள்ளும்  வேலைகள் மீண்டும் தொடங்கும்    திருமண வீடுகளிலும் ,இன்னபிற நிகழ்வுகளிலும் மரக்கன்றுகளோடு, மாஸ்க்கும் தரப்படலாம் ரெய்ன் கோட்டுகளைப் போல கொரோனா கோட்டும் கடையின் வாசல்களில் தொங்கலாம்    அடுத்தவரின் ரகசியங்களை மறைக்கத் தெரியாதவனுக்கு "கொரோனா " எனவும் பட்டப்பெயர் சூட்டலாம் கொரானா காலத்துல கூட இம்புட்டு வெலை விக்கில "இப்போ இம்புட்டு வெலையா ? என ,ஏதோ ஒரு சந்தையில் கிராமியப் பெண்ணின் குரலை...

கல்லூரி

கல்லூரியில்  படித்த ஒவ்வொருவரின் ஆட்டோகிராப் புத்தகங்களிலும் " நீ நேசித்தவர் உனக்கு கிடைக்காவிட்டாலும் உன்னை நேசித்தவரை நீ விரும்பு " என  ஆண், பெண்  தோழமைகள் எழு...

மூவர்ணத் துண்டு

இன்றைய கொரோனா நோய்த்தொற்றுக்காலத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஏதும் வழங்காத அதிமுக வையும் ,அந்தக் கட்சியினரையும் பற்றி புலம்பி தீர்த்ததோடு அல்லாமல்  , நல...

Sureshmaniyan: பாருக்குள்ளே நல்ல நாடு

Sureshmaniyan: பாருக்குள்ளே நல்ல நாடு : தற்போதைய கொரோனா நோய்த் தொற்று காலத்தில்  அனைத்து ( திமுக வை  திமுக வினரைத் தவிர யாரும் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கத...

பாருக்குள்ளே நல்ல நாடு

தற்போதைய கொரோனா நோய்த் தொற்று காலத்தில்  அனைத்து ( திமுக வை  திமுக வினரைத் தவிர யாரும் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )   அரசியல் இயக்கங்க...

நாஞ்சில்நாடனின் இடலாக்குடி ராசா

இடலாக்குடி ராசா  – நாஞ்சில் நாடன் கீழ்க்கண்ட நாஞ்சில்நாடனின் சிறுகதையை முழுக்க படித்தப் பிறகு, உங்களுக்கு நினைவில் எழும்பும் திரைப்படம் என்னவென்று கூறுங்கள் ...