நான் "ஆல் "ன்னு சொன்னா, இவன் "பூல் "ன்னு சொல்றான்ய்யா . இது மிகச்சிலரால் அல்லது பயன்பாட்டிலோ இல்லாத பழமொழியாகும். இது ஆபாசமான பழமொழியன்று, பழமொழி என்பது அனுபவத்தின் வாயிலாக மாந்தரின் உணர்ச்சி வெளியீட்டு கருவியாக வெளிப்படுத்துவது ஆகும். ஆனாலும் இந்த பழமொழிகள் பயன்படுத்தும், பிறரிடம் கூறும் போக்கு நம்மவரிடையே நாளுக்கு நாள் அருகிவருகின்றது என்பது சற்றேறழத்தாழ நிதர்சனமான உண்மையும் கூட. வயதான கிராமத்துவாசிகளிடம் நாம் பேச்சு கொடுத்தோமேயானால் பேச்சினூடே அவர்களின் வாழ்வியலில் கண்டறிந்த, கேட்டறிந்த பழமொழிகள் எண்ணெய் தோய்த்து போட்ட பாப்கார்ன் சோளமாய் வெடித்துச்சிதறும் . வேலையே செய்ய திறமில்லாத ஒரு நபரின் வலிவை விளக்க " அருக்க மாட்டாதவன் சூத்துல அய்ம்பத்தெட்டு அருவாளாம் " என்றும், ஒரே நபருக்கு ஒரே சமயத்தில் பல வேலையிருக்குமாயின் " ஊருக்கு ஒரு தேவுடியா, அவ யாருக்குன்னுதான் ஆடுவாளாம் " என்ற வகையில் சொலவடைகள் சுவைமிகுந்ததாக இருக்கும். பழமொழிகள் வட்டாரம் சார்ந்த வழக்கு மொழியினதாகவும் இருக...