பள்ளிக்கூடத்துல படிச்ச காலகட்டத்துல நம்மாள மறக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் " பள்ளிக்கூடத்துக்கு இன்சுபெக்சனுக்கு இன்ஸ்பெக்டர் ( ஆய்வாளர்) வந்து கேள்வி கேட்பாரே அதுதான். அன்றைக்கு மட்டும் எல்லா வாத்தியாருகளும் நேரத்துல வந்திடுவாங்க,எங்க ஊரு சுத்தமல்லி சின்ன பள்ளிக்கூடம் அருகில் ஒரு பெரிய அரசமரம் இருந்துச்சி, இலையெல்லாம் கீழே உதிர்ந்து சருகாகி கிடக்கும் அந்த சருகையெல்லாம் பசங்கதான் பொறுக்கனும், ஆளுக்கொரு சின்ன குச்சிய வச்சிக்கிட்டு வடைய கம்பியால குத்தி குத்தி எடுப்பாங்களே அது மாதிரி அந்த குச்சி நிறையும் குத்தி குத்தி எடுப்போம். பொம்பள பசங்க எல்லாம் க்ளாஸ் ரூமை கூட்டி பெருக்கிட்டு வகுப்பு ஆரம்பமானதும் நாங்க எல்லோரும் வாயில விரல வச்சி பொத்திகிட்டு அமைதியா உட்கார்ந்திருப்போம். அந்த அரச மரம் மட்டும் சலசலன்னு சத்தம் போடும், சமையல் ரூம் பக்கத்துல நாலு காக்காவும் சத்தம் போடும். புலி வருது, புலி வருது, எனும் கதையாக பன்னிரண்டு மணி அளவுல ஜீப்புல வருவாரு அந்த இன்ஸ்பெக்டரு. அப்போ பள்ளிக்கூடமே நிசப்தமாக இருக்கும். அந்த நிசப்தத்தின் இடையே பள்ளிக்கூடத்...