மூங்கிலாய் வந்தேன் புல்லாங்குழலாக்கினாய் மரமாய் வந்தேன் சிலையாக்கினாய் அரும்பாய் வந்தேன் மாலையாக்கினாய் தகரமாய் வந்தேன் தங்கமாய் மாற்றினாய் மண்ணாய் வந்தேன் மட்பாண்டாமாய் மாற்றினாய் ஒலியாய் வந்தேன் இசையாக்கினாய் மரமாய் வந்தேன் படகாக மாற்றினாய் விதையாய் வந்தேன் விருட்சமாய் மாற்றினாய் அகரம் கேட்டேன் அனைத்தும் தந்தனை நான் ஒரு நூறு கேட்டேன் (அக-புற )நானூறு தந்தனை பசியாற பால் கேட்டேன் முப்பால் தந்தனை இன்னது வேண்டுமென்றேன் இனியவை தந்தனை மணிகள் ( Money) கேட்டேன் சிந்தாமணி தந்தனை களிப்போடு தொகைகள் கேட்டேன் கலித்தொகையே தந்தனை காரம் கேட்டேன் சிலப்பதிகாரம் தந்தனை உம்மைக் கேட்டேன் தமிழை தந்தனை. உயிர் நீ என் உயிர் நீ எனக்கு கல்வி புகட்டிய பிள்ளையார் கோவில் தங்கராசு ஆசிரியர் முதல், இன்று வரை எனக்கு நற்கல்வி புகட்டும் தாளாளர் அய்யா ,இயக்குநர் அய்யா உள்ளிட்ட, அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் எனது அன்பான ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தினம் தினம் ஏதோ ஒரு அனுபவத்தை போதிக்கும் அனைத்து பொருளும் எனக்கு ஆசிரியரே ! உ...