காளமேகப் புலவரின் தனிப்பாடல் என்றாலே எப்போதும் எனக்கு தனியாத பெருவிருப்புண்டு. எனது கல்லூரி காலத்தில் தத்தனூர் கிளை நூலகம் என்னுள் இருந்த புத்தக பசியை போக்கி, புதிய பாதையை எனக்கு அமைத்துக் கொடுத்தது. அங்குதான் காளமேகப் புலவரோடு எனக்கு அறிமுகம் கிடைத்தது கம்பனின் தனிப்பாடல்கள் நிறைய கிடைத்தன. அந்த வகையில் தமிழில் குறிப்பிட்ட ஒரே வர்க்க எழுத்தை வைத்து அவர் எழுதிய பாடல் மிகவும் ரசனைமிக்கது . அந்த பாடலை ஒரு முறை வாய்விட்டு உரக்க வாசித்து பாருங்கள் நாக்கும், பற்களும் நன்றாக நாட்டியம் ஆடுவது போல இருக்கும். இதோ அப்பாடல். தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது? உரத்துப் படிக்கும்போது பேசும் சக்தியற்ற ஊமை மனிதன் பிதற்றுவது போல இருக்கும். தகர வரிசை எழுத்துக்களை கண்டவிதமாக அடுக்கி எழுதிவைத்துள்ளது போல தோன்றும். ஆனால் ஆழ்ந்து படித்துக் கருத்தை அறியும்போது காளமேகப்புலவரின் திறமையை மட்டுமல்ல, தமிழ்மொழியின் வலிமையையும் எண்ணி எண்ணி இறும்பூதடையாமல் இருக்க முடியாது. வண்டொன்றைப் பார்த்துப் பாடுவ