Skip to main content

Posts

Showing posts with the label போர் யானை

நாணம்

யானை வெட்கப்படுவதை பார்த்திருக்கீன்றீர்களா ?  ( அல்லது ) கேள்விப்பட்டுள்ளீர்களா?  திருக்குறளில் ஒரு தலைவி தன்னுடைய தலைவன் தன்னை பார்ப்பது அறிந்து அவனை  நிமிர்ந்து பார்ப்பதற்கே வெட்கப்படுகின்றாள் என்பதை நம் திருவள்ளுவ பாட்டன் அழகாக சொல்வார் யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும் இதன் பொருள் யாதெனில், நான்  அவளை நோக்கும்போது அதாவது பார்க்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், நான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள் அல்லது புன்முறுவல் செய்வாள். ஆக ஒரு பெண் தன்னுடைய காதல் வாழ்க்கையின் துவக்க காலத்தின் போது வெட்கத்தின் மூலமாக " உன்னை நான் ஏற்றுக் கொள்கிறேன் " என்பதை விழி மொழியால் அறிவிக்கின்றாள். மேற்கண்ட குறளை மையமாகக் கொண்டு வாழ்க்கைப்படகு எனும் படத்தில கவியரசு  கண்ணதாசன்  MSV இசையில் ஒரு பாடலில் நேற்று வரை நீ யாரோ நான் யாரோ இன்று முதல் நீ வேறோ நான் வேறோ காணும் வரை நீ எங்கே நான் எங்கே கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்கின்றாயே விண்ணை நான் பார்க்க...