Skip to main content

Posts

Featured post

அவ்வையாரின் ஆத்திச்சூடியும் பாரதியின் புதிய ஆத்திச்சூடியும் s

அறம் செய விரும்பு  ஆறுவது சினம்  இயல்வது கரவேல்  ஈவது  விளக்கேல்  உடையது விளம்பேல்  ஊக்கமது கைவிடேல்  எண்ணெழுத்து இகழேல்  இப்படியாக அவ்வையாரின் ஆத்திச்சூடியை, எமது ஊரான  சுத்தமல்லி  தொடக்கப்பள்ளி வகுப்புகளில் மதிய சத்துணவுக்கு பின் ஒரு வித தூக்கம் கலந்த ஆயாசத்தோடு  " கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா " போட்ட அந்த நந்தவன நாட்கள் இன்னும் மனதை விட்டு அகலாமல் பசுமரத்தாணி போல் ஆழ பதிந்துள்ளது.  ஆனாலும் " அறம் செய விரும்பு "  எனும் வரிக்கு அடுத்துவரும் வரிகள் எல்லாம் அவ்வை பாட்டி கட்டளைத்தொனியில் ( Order)  கூறுவது போல இருக்கும். ஆனால் முதல் வரி " அறம் செய் " என்று இல்லாமல் " அறம் செய விரும்பு " எனும் வேண்டுகோள் தொனியில் ( Request)  காணப்படுகிறதே இதன் பிண்ணனி என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் அங்கேயும் ஒரு வியப்பும், நேர்த்தியும் மேலோங்கி நிற்கிறது.  அறம் என்பது தர்மம் அல்லது நீதி அல்லது உலகத்து உயிர்களுக்கெல்லாம் நீ செய்யக்கூடிய எந்தவொரு காரியம் நன்மை அளிக்குமோ அது அறம் என்று பொருள் கொள்ளலாம். உணவு இல்லாமல் கஷ்டத்தில் இ...
Recent posts
காகிதம்  எழுத்துகள் பயணிக்கும்  வெள்ளைத் தாவரச் சாலைகள். ஆதிகாலம் முதல் வாகனங்கள் மாறுபடலாம் ஆனால்  சேற்றில் காய்ந்து போன முதல் மனிதனின்,  முதல்காலடிச் சுவடே  முதல் மண்  காகிதம்  உள்ளங்கால் ரேகைகளே  முதல் எழுதுகோல்  பிறகுதான் இன்ன பிற....  சுத்தமல்லி. சு.சுரேஷ் மணியன் M A,

காகிதம்

காகிதம்  எழுத்துகள் பயணிக்கும்  வெள்ளைத் தாவரச் சாலைகள்.  ஆதிகாலம் முதல் வாகனங்கள் மாறுபடலாம்   சேற்றில் காய்ந்து போன முதல் மனிதனின், முதல்காலடிச் சுவடே  முதல் மண்  காகிதம்   உள்ளங்கால் ரேகைகளே முதல் எழுதுகோல்   பிறகுதான் இன்ன பிற....  சுத்தமல்லி. சு.சுரேஷ் மணியன் M A,

கம்பன் என் காதலி

தமிழ் என்ற சொல்லை நாம் உச்சரிக்கும் போது எத்தைகய இனிமை இருக்கிறதோ, அது போல "கம்பர் " என்ற சொல்லை உச்சரிக்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும்,  இறுமாப்பும் எனக்கு ஏற்படுவது உண்டு.    அதிலும் தமிழ் கடல் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கம்பனை, அவன் பாடல்களை  விளக்கும் போது மனம் குதூகளிக்கும் . கண்ணதாசன் உள்ளிட்ட பல கவிஞர்களின் எழுத்து வண்டி ஓடியதே,   கம்பனின் கவிதைகளை  அதன் சாரத்தை  அவர்கள் கடன் வாங்கிக் கொண்டதால்தான். இது முற்றிலும் உண்மை,  அதை கவியரசு கண்ணதாசனே கூறியிருக்கின்றார். சரி விடயத்திற்கு வருகிறேன் புலவர்களின் பாடக்கருத்தை விளக்கும் உரைகளான தெளிவுரை,  நயவுரை,  பொழிப்புரை என்பன போன்றவைகள் புலவன் கூறவந்த உண்மையான கருத்தை படிப்போருக்கு விளக்குகிறதா ?  என்றால்  ஆம் என்று நிச்சயம் கூறிவிட முடியாது. ஏனெனில் ? யானையை தடவி பார்த்த  குருடர்களின் கதை போன்றுதுதான் , யானையின் வாலை பிடித்து பார்த்த குருடன் யானை என்பது மெல்லியதாக நீட்டமாக இருக்கும் என்றும்,   மற்ற ஒரு குருடன் யானையின் காலை பிடித்து பார்த்து ய...

பசியின் மொழி

உண்ண ஒரு கைப்பிடி  கவளச் சோற்றுக்காகவும், ஒரு மிடறு உண்ணு நீர் குவளைக்காகவும், காத்து, துக்கித்து இருப்பானின்  மொழி.......... கண்களா ? கைகளா ? சொற்களா ? சுத்தமல்லி, சு. சுரேஷ் மணியன்   M. A,

திருக்குறள்

நித்திரை பெண்ணாள் என்னை ஆரத் தழுவும் இந்த பின்னிரவில் திருக்குறளின் ஒரு காட்சி உள்ளுக்குள் நினைவுக்கு வந்து போகிறது எனக்கு. சில நூல்களை முன்னிருந்து பின்னோக்கி படிக்க வேண்டும், உதாரணத்திற்கு கலிங்கத்துப் பரணி. ஆனால் நம் கல்லூரிப் பாடத்திட்டத்தில் கடைத் திறப்பை தள்ளி வைத்து விட்டு, காளி பாடியது, கோவில் பாடியது என பாடத்தை அமைப்பார்கள். திருக்குறள் அமைப்பு முறையும் நம்மவர்கள் அறம், பொருள், என அமைத்து விட்டு ஏனோ தானோ என இன்பத்துப் பாலை கடைசியாக பாடத்தில் வைப்பர்கள். குறள் என்றாலே, வள்ளுவர் என்றாலே வெறுமனே அறிவுரை சொல்லும் ஆசாமியாக மாணவர்கள் நினைக்கும் அளவிற்கு அது அமைந்து விடும் கலிங்கத்துப்பரணியின் கடை திறப்பை ஒரு கல்லூரி மாணவன் படித்தால் அவன் ஆயுள் முழுக்க ஜெயங்கொண்டாரை மறக்க மாட்டான் ஏனெனில் கடை திறப்பில் மிக அற்புதமான வர்ணனை நிறைந்து காணப்படும் அவன் வயதுக்கு கடைத் திறப்பை படிக்கின்ற போது ஜெயங்கொண்டாரை நினைத்து மிக மிக சந்தோஷப்படுவான். திருக்குறளின் 1121-வது குறளான "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்" எனும் இன்பத் துப்பால் குறளுக்கு நம்மவர் சொல்லும் உ...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.