நித்திரை பெண்ணாள் என்னை ஆரத் தழுவும் இந்த பின்னிரவில் திருக்குறளின் ஒரு காட்சி உள்ளுக்குள் நினைவுக்கு வந்து போகிறது எனக்கு.
சில நூல்களை முன்னிருந்து பின்னோக்கி படிக்க வேண்டும், உதாரணத்திற்கு கலிங்கத்துப் பரணி. ஆனால் நம் கல்லூரிப் பாடத்திட்டத்தில் கடைத் திறப்பை தள்ளி வைத்து விட்டு, காளி பாடியது, கோவில் பாடியது என பாடத்தை அமைப்பார்கள்.
திருக்குறள் அமைப்பு முறையும் நம்மவர்கள் அறம், பொருள், என அமைத்து விட்டு ஏனோ தானோ என இன்பத்துப் பாலை கடைசியாக பாடத்தில் வைப்பர்கள்.
குறள் என்றாலே, வள்ளுவர் என்றாலே வெறுமனே அறிவுரை சொல்லும் ஆசாமியாக மாணவர்கள் நினைக்கும் அளவிற்கு அது அமைந்து விடும் கலிங்கத்துப்பரணியின் கடை திறப்பை ஒரு கல்லூரி மாணவன் படித்தால் அவன் ஆயுள் முழுக்க ஜெயங்கொண்டாரை மறக்க மாட்டான் ஏனெனில் கடை திறப்பில் மிக அற்புதமான வர்ணனை நிறைந்து காணப்படும் அவன் வயதுக்கு கடைத் திறப்பை படிக்கின்ற போது ஜெயங்கொண்டாரை நினைத்து மிக மிக சந்தோஷப்படுவான்.
திருக்குறளின் 1121-வது குறளான "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்" எனும் இன்பத் துப்பால் குறளுக்கு நம்மவர் சொல்லும் உரை
மென்மையான மற்றும் பணிவான சொற்களைப் பேசும் இவளது வெண்மையான பற்களிடையே ஊறிவரும் உமிழ்நீரானது, பாலோடு தேன் கலந்தாற் போன்ற இன்சுவை உடையதாகும். காதலியின் இன்சொல்லும் அவளது இதழூறும் சுவையும் பால் கலந்த தேன் போன்றது என்று திருவள்ளுவர் இக்குறளில் வியந்துரைத்துள்ளார் என்பர்.
ஏன் அறத்துப்பாலில் ஒரு தாய் அல்லது தந்தை தன்னுடைய அன்பிற்கினிய மகனுக்கோ மகளுக்கோ அவர்கள் குழந்தை பருவமாக இருக்கும்போது அவர்களின் அளப்பரிய குறும்பை பார்த்து அல்லது அறிவுத்திறனை பார்த்து முத்தம் இடும் போது இந்த காட்சியை நாம் அங்கு பொருத்திப் பார்க்க கூடாதா என்ன?
அதுபோல் வயதான தன்னுடைய தந்தைக்கோ தாயையோ பார்த்து மகனோ மகளோ" நீ என்னை எவ்வாறெல்லாம் பெற்று உழைத்து இந்த நிலைமைக்கு நீ என்னை ஆளாக்கியுள்ளாய் என்று வியந்து அவர்களை முத்தமிடும் போது இந்த காட்சியை பொருத்தி பார்க்க கூடாதா என்ன?
அன்போடும் தமிழோடும் ----- சு. சுரேஷ் மணியன் M. A,
01:25 AM
Comments
Post a Comment