திருவள்ளுவர் ஓர் நாள் ஆறாயிரம் ரூபாய்க்கு ஓர் ஆண்ராய்டு போனை வாங்கி வொய்பை அழைத்து வைபை முடுக்க சொல்லி வாட்ஸ்அப்பில் ஒரு குரூப்பை தொடங்கி குறளை பதிவிட்டு வந்தார். இவர் " நீரின்றி அமையாது உலகு " என்றார் சட்டென்று ஒரு விடலை " பீரின்றி அமையாது உலகெனச் (chat )சாட்டியது. கோமான் என்பான் குறுக்கே வந்து பெருசு ,உடையார்கள்தான் அறிவாளிகளாக இருப்பார்களா ? என்றுச் (Chat )சாட்ட உனக்கேன் இந்த அபத்தமான ஐயம் என்று முறைக்கும் முக ஸ்டிக்கரை இவர் அனுப்ப, " அறிவுடையார் எல்லாம் உடையார் " என நீதானே சொன்ன பெருசு என்று நாக்கினை கடிக்கும் ஸ்டிக்கரையும் சேர்த்து அனுப்பினான். மீண்டும் வொய்பை அழைத்தார் ஆண்ராய்டு அடுப்போடு சாம்பலாயிற்று தாடியை நீவியவாறே பனைமரம் நோக்கி போனார். ----சு.சுரேஷ்மணியன். M A