Skip to main content

களவும் கற்று மற

களவும் கற்று மற.!

திருட்டையும்  கற்றுக் கொண்டு மறந்து விடு. என்றா
ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்டு வரையறை செய்யவியலாத நம் மூத்த தமிழினமா சொல்லியிருக்கும் ?  
நிச்சயம் கனப்போதும் வாய்ப்பில்லை.  பொருளை மாற்றிப் புரிந்து கொள்வது நம் தவறே. ஆம் பழந்தமிழ் சங்கத் தமிழரின் வாழ்வியல் முறை  இரு பகுதியாக பகுக்கப் பட்டிருந்தது. 

முன்னது ( திருமணத்திற்கு  முன் )
களவு வாழ்க்கை ,
பின்னது ( தி பி) கற்பு வாழ்க்கை.  

மனமொத்த உரிய வயதினையடைந்த ஆணோ, பெண்ணோ தனக்கோ பிடித்தவரை காதல் செய்து, பிறகு ,அது ஊராருக்கு அம்பலாகவும் ,அலராகவும் பரவுதல் அறிந்து அச்செய்தி தோழி மூலமாக செவிலிக்கு சொல்லி (இங்கு செவிலி என்பது Nurse அல்ல, வளர்ப்புத் தாய்) செவிலி நற்றாய்க்கு சொல்லி ( நற்றாய் எனில் நாற்றங்கால் அல்ல, பெற்றத் தாய்) நற்றாய் இல்லாரிடத்தில் ( ஒன்றும் இல்லாதவர் என்று பொருள் அல்ல,வீட்டார்) கூறி திருமண ஏற்பாட்டுக்கு இசைவு  தெரிவிப்பார்கள். பிறகு அந்த தலைவன் பெண் கேட்டு வருவான், பிறகு திருமணம் செய்து வைத்து கற்பு வாழ்க்கை வாழத் தொடங்குவார்கள். இங்கே கற்பு எனப்படுவது இல்லற வாழ்க்கை.  

சரி மேட்டருக்கு வருவோம்.  
ஒரு ஆண் களவு வாழ்க்கையினை ஒரு பெண்ணோடு மட்டும்தான் மேற்கொள்ள வேண்டும். களவு  முடிந்து கற்பு என்கிற இல்லற வாழ்க்கைக்கு வந்த பிறகு ,களவை மறந்து விட வேண்டும். அப்படி மீறியும் போனால் " சொல்வதெல்லாம் உண்மை " டிவி யில வந்துடுவ.  

கனிவோடும் தமிழோடும்
     ___ கரிசல்நாடன் (Alias)சுரேஷ் மணியன். M. A,

Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.

அனிச்சம்

தமிழ் பேசும் உறவுகளுக்கு இனிய காலை/ மதியம் /மாலை /இரவு வணக்கம் ( படிக்கும் நேரத்திற்கேற்ப பொழுதை சேர்த்துப் படிக்கவும்). ""அழகாய் இருப்பவை எல்லாம்  உன்னை நினைவுபடுத்துகின்றன உன்னை நினைவுபடுத்துபவை எல்லாம் அழகாக இருக்கின்றன'' என்ற காதல் கவி தபுசங்கரின் வரிகளைப் போல,                         "" படித்தற்குரியதெல்லாம் ரசனைக்குரியதாய் இருக்கிறது  ரசனைக்குரியதெல்லாம் படித்தற்குரியதாய் '' இருக்கிறது என்பேன் நான் .     அகநூலோ,  புறநூலோ,  அகப்புற நூலோ,  -நீதிநூலோ எவ்வித நூலாயினும் வாழ்வியல் கருத்து நெறிகளைத்தாண்டி இலக்கிய இன்பம் பயக்குகின்ற, இலக்கிய ரசனை தருகின்ற கருத்தமைந்த வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும், இது திண்ணம்.            ஆனால் இன்றைய தமிழிலக்கிய மாணவர்களுக்கான  கல்வி முறையில் ரசனை, அழகியல் என்பதை இலக்கியங்களின் துணைக் கொண்டு கற்பிக்கப்படவில்லை, அது போன்ற பாடத்திட்டங்களும் அமைக்கப்படவில்லை ,அப்படியே பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தாலும், தக்காரா...