திருமணம் நடக்கப் போகிறது அந்த இளம் பெண்ணுக்கு, அவளுடைய தாய் தன்னால் முடிந்த அளவு உழைத்த பணத்தைக் கொண்டு, தன் மகளுக்கு சீரும் சிறப்புமாக மணமுடித்து வைக்க தயாராகிறாள் அந்த தாய்.
மணமேடையில் மணமகன் ,மணமகளின் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப் போகிறான். அந்தத் தாயோ மணமக்களுக்கு முன்னே, அருகிலோ நிற்க முடியாத சூழல். ஏனெனில் அந்தத் தாயின் கணவனோ ஓராண்டுக்கு முன் மறைந்து விட்டார். அதனால் அவள் திருமணப்பந்தலுக்கு ,
வெளியே ஓர் புறத்திலே ,பக்கவாட்டில் வேயப்பட்ட கீற்றை விளக்கி அந்த நிகழ்ச்சியை கண்கள் கசிந்தவாறு, கண்ணார தன் மகளின் திருமணத்தை பார்த்தாளாம். இந்த நிகழ்வு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஓரிடத்திலே அவரது " நெஞ்சுக்கு நீதி "நூலில் படித்திருக்கிறேன்.
அதே போல ,அதே சூழல்தான் ,தற்போது எனக்கும்,
பழூர் 03.03.2025 திங்கள் மாலை அ(இ)ன்று இந்நிகழ்ச்சி என்பதை கட்செவி புலனஞ்சல், முகநூலிலும் பார்க்கிறேன் அனைத்துப் பொறுப்பாளர்களின் பெயர்களைப் ( Responsibility given by the party ) மாவட்டப் பிரதி என்ற சொல்லைப் படிக்கிற போது ஆண்டு 2010 க்கு சிந்தைக்குள் பின்னோக்கிப் பார்க்கிறேன்.மனம் செல்கிறது.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஏனெனில் என்னை அதே கால கட்டத்தில் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய், நம் திமு கழகத்திலும் ,அப்போதைய ஒருங்கிணைந்த தா.பழூர் ஒன்றிய செயலர் ,சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் க.சொ.க.கண்ணன் அவர்களின் கரங்களையும், நம் அமைச்சர் பெருமகனார் மாண்புமிகு அண்ணன் சிவசங்கர் அவர்களின் கரங்களையும் இறுகப் பற்றிக்கொள் ! பற்றிக்கொள் !
என்று என்னை ஆற்றுவித்த,அரசியலை எனக்கு தோற்றுவித்த, இடர்நேரும் போதெல்லாம் ஆறுதல் சொன்ன, நன்னெறி பழக்கிவித்த ஒருங்கிணைந்த தா.பழூர் ஒன்றியத்தின் திமு கழக மாவட்ட பிரதிநிதிகளுள் ஒருவராக, மக்கள் தொண்டர் அய்யா அவர்களால் தேர்ந்தெடுத்த ,பிறகு நம் அமைச்சர் அவர்களினால் ஒன்றி பொறுப்பாளராக பணியாற்றிய எங்கள் சித்தப்பா தா.பழூர் (மே) ஒன்றியத்தின் , மேனாள் ஒன்றிய பொறுப்பாளர் சுத்தமல்லி வா.சௌந்தரராஜன்
அவர்கள் இப்போது கழகத்தினரின் அனைவரது மனங்களில் மட்டுமே மறையாமல் இருக்கிறார்.
""அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ""
இந்த வரிகளின் உண்மையான அருத்தம் அடிக்கடி எனக்கு புலன்படுத்துவது,
நீங்கள் அல்லது நான் ஒருவரோடு பழகியிருந்தாலும், பழகாதிருந்தாலும் நேரில் பார்க்காதவராயினும் நாம் அன்பு செலுத்திய ஒருவரைக் எங்கேயோ காண நேரிட்டாலும் ,பார்க்க நேரிட்டாலும் ஒருமுறையாவது சில இனிய வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். புன்னகையாலோ , கண்களின் மூலமாக சிரித்து கொள்ளுங்கள் .ஏனெனில் அந்த சந்திப்பு இருவரில் ஒருவருக்கு கடைசி சந்திப்பாக இருக்கலாம். இறுக்கமான வார்த்தைதான் ஆனால் அந்த வலி இருக்கிறதே ! பகைவனுக்கு கூட வரக்கூடாது என்றே நினைப்பேன்.
காலங்களே மனதிற்கு மருந்து .
அற்றைத் திங்கள்
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் .....
Comments
Post a Comment