மறுபிறவியிலேனும்
மனைவியாக வாய்ப்பளா ?
என் முதல்காதலி
அவள் நினைவுகளை
சுமந்து சுமந்து
நெஞ்சம் நோகிறது
புகைப்படத்தைப் பார்த்து பார்த்து
கண்கள் கசிகிறது
வடக்கில் இருந்து வரும்
வாடைக்காற்றோ
வாட்டித் தொலைக்கிறது
ஒற்றை மாடு பூட்டப்பட்ட
வண்டிகாரன் நிலையில்
வாழ்ந்து கழிக்கிறேன்
Comments
Post a Comment