Skip to main content

தமிழ்

10.48மணிக்கு நியூஸ் தமிழ் செய்தி சேனலை பார்த்துக் கொண்டிருந்தேன் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தன்னை காதலித்து திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய தன்னுடைய கணவன் வேறு ஒரு பெண்ணோடு விமானத்தில் இறங்கி வருவதை அறிந்து அவர்களுடன் தகராறு ஈடுபட்டார் அந்த பெண்மணி. இந்நிகழ்வை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது அல்லது கேட்டபோது எனக்கு சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் தமிழ் படித்ததால் அநேக வேலைகளில் கேட்கும் ஏதோ ஒரு செய்திகள் அல்லது பார்க்கும் ஒரு காட்சிகள் எனக்கு திடீரென சங்க இலக்கியத்தை நினைவூட்டும் ஏனென்றால் நான் தமிழ் படித்த ஒரு சுரேஷ்


“பூத்த பொங்கர்த் துணையுடன் வதிந்த

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி

மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்

உவக்காண் தோன்றும்...”


( அகநானூறு- 4 )

தன்னுடைய காதல் அதாவது தலைவன் வினைபொருட்டு அதாவது பணம் ஈட்டுவதற்காக அல்லது அல்லது அரசனுக்கு போரின் பொருட்டு உறுதுணையாக ஒரு துணையாக தன்னுடைய காதலியாகிய தன்னுடைய தலைவியை அவன் பிரிந்து சென்று விட்டான்‌.
மீண்டும் அவன் வரும் காலத்தை நினைத்து என்று? வருவான் .எப்போது வருவான்? என்று நினைத்து காத்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு அவளது தோழி பின்வருமாறு கூறி ஆற்றுப்படுத்துகிறாள்
அதாவது, சோலையில் தன் துணையோடு இன்புற்றிருக்கும் வண்டு, தேன்
உண்ணும் போது, அவை தன் தேர்மணியோசைக்கு பயந்து விடுமோ என்றஞ்சி, மணியின் நாவை ஓசை எழாத வண்ணம் இழுத்துக்கட்டும் மாண்புடையவனா
ம்    அந்தத்தலைவன். அப்படிப்பட்டவன் உன்னை தவிக்கவிட்டு வாராதிருப்பானா? விரைவில் வந்துவிடுவான் என்கிறாள் தோழி அந்த தலைவியிடம் அதாவது அந்த பெண்ணிடம்.

அதாவது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த மொழியான தமிழ் மொழியில் ஒரு இலக்கியத்தில் தன்னுடைய காதலியை காண வரும் அந்த தலைவன் தான் வருகின்றபோது தேரில் இருக்கக்கூடிய மணி நாவானது அந்த மணியில் அசைந்தால்  ஓரு ஓசை வரும் என்று அங்கே மனதில் நினைத்தான் தேன் அருந்தி கொண்டிருந்த  கொண்டிருக்கும் அந்த வண்டுகள் அதாவது இணையான ஜோடி வண்டுகள்  பிரியக்கூடாது என்று எண்ணி தன்னுடைய தேரின் நாவை கட்டிக்கொண்டு வரக்கூடிய அந்த மாண்பு அந்த அத்தகைய தலைவன் வாழ்ந்திருக்கிறான் அல்லது வந்து கொண்டிருக்கிறான் எனவே உன்னை காண்பான் என்று தோழியே அறிந்து அதனை தன்னுடைய தலைவிக்கு சொல்கிறாளே அந்த மாண்பை நினைக்கின்ற போது தற்காலத்தில் காதலித்து அல்லது காதலிக்கின்ற போது திருமணம் செய்த பிறகு அல்லது திருமணம் நடக்கின்ற பொழுது தன்னுடைய துணையை திடீரென கழற்றிவிட்டு வேறு ஒருவரை காதலிக்கவும் அல்லது திருமணமும் செய்யக்கூடிய ஒரு தமிழ் மகன் அல்லது தமிழ் மகளை பற்றிய செய்திகளை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

சுரேஷ் மணியன்M A, (alias )கரிசல் நாடன்

Comments

Popular posts from this blog

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி : உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு  இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன் கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர். கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் ...