சங்க காலத்தில் தான் விளையாடிய போது தவறி புதையுண்ட விதை செடியாக வளர்வதை கண்ட பெண்ணொருத்தி அதற்கு நீரும் பாலும் இட்டு வளர்த்தாளாம் வயது முதிர்ந்த பிறகு தன் கட்டழகு காதலனோடு அந்த மரத்தின் அருகே சந்திக்கிறாள், காதலன் அவளிடம் காதல் வார்த்தை பேசுகிறான் வெட்கப்பட்டுக்கொண்டே அந்த பெண் சொன்னாளாம் இங்கே என் அக்கா இருக்கிறாள் என்றாள் வாருங்கள் வேறிடம் செல்வோம் என்கிறாள் காதலன் பதட்டத்தோடு எங்கே உன் அக்கா ? என்றான்
அவள் கை நீட்டி தான் வளர்த்த மரத்தை காண்பித்தாளாம்.
இறைவா அந்த பெண் கைகாட்டிய மரமாக இந்த மரம் இருக்க வேண்டாம்
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே 172 நெய்தல்
அவள் கை நீட்டி தான் வளர்த்த மரத்தை காண்பித்தாளாம்.
இறைவா அந்த பெண் கைகாட்டிய மரமாக இந்த மரம் இருக்க வேண்டாம்
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே 172 நெய்தல்
- ( ஜெயங்கொண்டம் To அரியலூர் சாலையில் காட்டுபிரிங்கியத்தில் சாலை விரிவாக்கத்திற்காக மூதாதையர் நட்டு வளர்த்த மரங்களை கொலை செய்த போது நான் கிளிக்கியது இதுவும் இலைக் கொலையே )
Comments
Post a Comment