Skip to main content

Posts

நான் ஏன் தமிழ் படித்தேன்?

நான் ஏன் தமிழ் படித்தேன் ? எதனால் தமிழ் பாடத்தை தேர்வு செய்தேன் ?  இது போன்ற இன்ன பிற கேள்விகளும் தூக்கமில்லா இரவுகளில் எனக்குள் நானே எழுப்பி கொள்வதுமுண்டு.  அப்போ நான் பத்தாவது படிக்கறச்சே,  கேபிள் கனெக்ஷன் கிராமத்தை எட்டிப் பார்க்காத அந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி சேனல் மட்டுமே வாய்த்தது. ஞாயிறு மாலை மட்டுமே திரைப்படம் போடும் முன்னதாக, வசந்த் &கோ நிறுவனம் வழங்கும் " சாப்பிடலாம் வாங்க " என்கிற சமையல் நிகழ்ச்சியின் முடிவில் சமைத்த பதார்த்தங்களை உண்டு ருசி பார்த்து பரிசு தர வருவார் அமரர் வசந்தகுமார் அவர்கள்.  அப்போது அந்நிகழ்ச்சியின் நெறியாளர் வசந்தகுமாரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்  .  நீங்கள் ஒரு தொழிலதிபர் ஆகாவிட்டால், வேறு என்னவாக ஆகியிருக்க ஆசைப்பட்டிருப்பீர்கள் ?  என்று, வசந்தகுமார் கூறினார் " நான் தமிழ் படித்து ஒரு தமிழ் பேராசிரியராக ஆகியிருப்பேன், எனக்கு கம்பனின் ராமகாதை மிகவும் பிடிக்கும்  ராமன் நாடு துறந்து காடேகும் நிகழ்வை கம்பர் பாடுவார்  சீரை சுற்றித் திருமகள் பின்செல, மூரி விற்கை இளையவன் முன்செல, காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ் ...

தாங்கல், தாங்கல்

ஏந்தல், தாங்கல், என்ற இரு சொற்களின் பொருளறிவோம்  அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில்  இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது . ஆனாலும் இரு சொற்களும் நீர்நிலையை குறிக்கும் சொல்லாகும்.  மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை உடைய நீர் நிலை  ஏந்தல் ஆகும்.உடையார்பாளையம் அருகே உள்ள இடையாறு பக்கம் உள்ள ஏரிக்கு அருகே உள்ள ஊரின் பெயர் ஏந்தல் ஆகும். ஏரியின் பெயரே ஊர்ப்பெயராகவும் ஆயிற்று. தாங்கல் என்பது அருகில் உள்ள ஏரியின் உபரி நீர் அல்லது ஆற்று நீரை சேமிக்கும் நீர் நிலையின் பெயரே தாங்கல் ஆகும் .தாங்கலேரி எனும் பெயர் கொண்ட ஏரி தத்தனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்திற்கு நீர்நிலையின் பெயர் தாங்கலேரி என்பதாம்.   ஆக ஏந்தல், என்பதும், தாங்கல் என்பதும் நீர்நிலையின் பெயராகும்.  ஆய்ந்தறிவீர் தமிழ் மறவீர்! இப்படிக்கு - சுரேஷ் மணியன் M.A,

வாழ்க்கை

உலகில் தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்ல ஒரு சராசரி நபர் என்ன செய்ய முடியும்? வேண்டும் ? என்ற கேள்வி உனக்குள்ளே எழுமானால் , அதற்கான பதில் இதோ !  பிரபல கியூபா எழுத்தாளரான ஜோஸ் மார்டி ஒவ்வொரு மனிதனும் இறப்பதற்கு முன்பாக, பின்வரும் விஷயங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவையாவன; Have a child, Plant a tree, Write a book - Jose Marti ஒரு குழந்தை பெற்றுக் கொள், ஒரு மரத்தை நடு, புத்தகம் ஒன்றை எழுது - ஜோஸ் மார்டி குழந்தையைப் பெற்றுக் கொள்வதன் மூலம், அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதன் மூலம், சமுதாயத்திற்கு நல்லதொரு குடிமகனை உருவாக்கிக் கொடுக்கிறார். அந்த குழந்தை, சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மரத்தை நடுவதன் மூலம், உலகம் பசுமையாக தொடர்ந்து இருப்பதற்கான தனது பங்கினை விட்டுச் செல்கிறார். பல தலைமுறைகளுக்கு, அந்த மரம் தனது கனிகளை கொடுக்கும். நிழல் கொடுக்கும். ஆக்ஸிஜனை பரப்பும். மழையை கொண்டுவரும். பூமி வெப்பமடையாமல் காக்கும். புத்தகம் ஒன்றை எழுதுவதன் மூலம், தனது அறிவனை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டுச் செல்கிறார். அவர்கள் அதனைப் பயன்படுத்தி, இன்னும் மேன்மேலும், அறிவனை வளர்...

மக்களோடு நான் _ நூலில்

எனது நேரடி பார்வையில் படும் விதமாக வைத்துள்ள எனது புத்தக அலமாரியில் நம் மாண்புமிகு அமைச்சர் .  S. S. S அண்ணனின் " மக்களோடு நான் " நூல் நடுநாயகமாக வைத்திருப்பேன். மாதம் ஒரு முறையேனும் சில பகிர்வுகளைப் படித்து  பல மேன்மக்களின் ஆளுமைப்பண்புகள் குறித்து வியப்பதுண்டு.    ஆலத்தூர் பெரியவர் கிருஷ்ணமூர்த்தி அய்யா அவர்களைப் பற்றி, நம் அண்ணன் மாண்புமிகு. அமைச்சர் அவர்கள்  " மக்களோடு நான் " நூலில் குறிப்பிட்டுள்ள ஹாஸ்யமான பகிர்வும் பதிவும் இதோ   " எங்க அண்ணன் ஒருத்தர் இருக்கார். அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. குன்னம் தொகுதியில் உள்ள ஆலத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் . ஏழு முறை ஒன்றியச் செயலாளர் .உள்ளாட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து மக்கள் பிரதிநிதி.மக்களின் அன்பைப் பெற்றவர்.  அவர் எல்லோரையும் அண்ணன்னுதான் கூப்பிடுவார், தன்னை விட வயது குறைந்தவர்களையும். முன்னாள் ( இந்நாள்)  அமைச்சர் அண்ணன் கே.என். நேரு அவர்களின் மச்சினர்.  ஒரு முறை, மீன்வளத் துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமி அவர்கள்  எங்கள் பகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தாரு.  அவரை வரவேற்று அ...

தீர்ப்பு

               "" தீர்ப்பு '' பொழுது சாயுற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடிதான், வயதான ஒண்டிக் கட்டையான தனக்கு ஒதுக்கியிருந்த  ஆண்டேரிக்கு தெக்குபக்கமுள்ள  தன்னுடைய வயக்காட்டில் ஊனியிருந்த  மொளகாய் கன்றுகளை பார்த்துட்டு,            " நாளைக்கு காலையில் சின்ன ஓடையிலிருந்து தண்ணி மொண்டு மொளாக் கன்னுக்கு  குழித் தண்ணி ' ஊத்தியாகணும் என்ற முடிவோடு, எப்போதும் தான் குளிக்கிற, தாமரைக்கொடி மண்டிக் கிடக்கும்  ஆண்டேரிக்கரை  மாது ஊட்டுத்துறைக்கு வந்து சேர்ந்தார் நம்ம கிருஷ்ண  படையாச்சி.    அந்த ஊரு பிறை நிலா வடிவான  தாமரைக்கொடி நிறைந்தஆண்டேரியில் ,சிமெண்ட் படிக்கட்டுகள் அமைக்கப்படாத அந்த நாளில்  குளிக்கக் கூடிய ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு பேரு புழக்கத்தில் இருந்தது.  ஏரிக்கு  வடமேற்கே அரசமரம் பக்கத்தில்  உள்ள குளியல் துறைக்கு மனியாரு ஊட்டு துறை என்று பெயர் , ஏன்னா ?  அந்த குளியல்  துறைக்கு மேற்கு பக்கத்தில்  மணியார் குடும்பத்து சின்னசாமி வீடு இர...

அல்லல் ,அள்ளல்

பொருளறிவோம்  அல்லல் _   துன்பம் ,கஷ்டம்   எ கா ; 1  அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி (  குறள் எண்:245 ) எ கா ; 2.  "அல்லல் உழப்பிக்கும் சூது '    குறள் _ 938  எ கா ; 3    அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று _ ( திருவாசகம் 90 ) அள்ளல் _  எனும் சொல்லுக்கான பல பொருள்கள்  எடுத்தல், அள்ளுதல், பறித்தல், சேற்று நிலப்பரப்பு, நெருக்கம், ஒருவகை நரகம் எ கா ; 1  " அள்ளல் பழனத்து அரக்கு ஆம்பல் வாய் அவிழ'                  _  ( முத்தொள்ளாயிரம் )  மேற்காணும் பாடலில் "அள்ளல்' எனும் சொல் சேற்று நிலப்பரப்பை குறிக்கிறது . அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம் ; கரிசல்நாடன் M,A 

குறள்கவிதை

குறள்கவிதை  இப்பிறவியில் உனைவிட்டு பிரியமாட்டேன் என்று  அவளை இறுகத் தழுவினான், அவன் .  அவளோ! மறுபிறவியில்  நீ என்னை விட்டு  பிரிந்துவிடுவாயா ? என நினைத்து  கண் நீர் பொழிந்தாள்.                  கரிசல்நாடன்  இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்