உலகில் தங்கள் அடையாளத்தை விட்டுச் செல்ல ஒரு சராசரி நபர் என்ன செய்ய முடியும்? வேண்டும் ? என்ற கேள்வி உனக்குள்ளே எழுமானால் , அதற்கான பதில் இதோ !
பிரபல கியூபா எழுத்தாளரான ஜோஸ் மார்டி ஒவ்வொரு மனிதனும் இறப்பதற்கு முன்பாக, பின்வரும் விஷயங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவையாவன;
Have a child, Plant a tree, Write a book - Jose Marti
ஒரு குழந்தை பெற்றுக் கொள், ஒரு மரத்தை நடு, புத்தகம் ஒன்றை எழுது - ஜோஸ் மார்டி
குழந்தையைப் பெற்றுக் கொள்வதன் மூலம், அந்தக் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பதன் மூலம், சமுதாயத்திற்கு நல்லதொரு குடிமகனை உருவாக்கிக் கொடுக்கிறார். அந்த குழந்தை, சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
மரத்தை நடுவதன் மூலம், உலகம் பசுமையாக தொடர்ந்து இருப்பதற்கான தனது பங்கினை விட்டுச் செல்கிறார். பல தலைமுறைகளுக்கு, அந்த மரம் தனது கனிகளை கொடுக்கும். நிழல் கொடுக்கும். ஆக்ஸிஜனை பரப்பும். மழையை கொண்டுவரும். பூமி வெப்பமடையாமல் காக்கும்.
புத்தகம் ஒன்றை எழுதுவதன் மூலம், தனது அறிவனை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டுச் செல்கிறார். அவர்கள் அதனைப் பயன்படுத்தி, இன்னும் மேன்மேலும், அறிவனை வளர்த்துக் கொண்டு, மேம்பட்ட மனிதர்களாக வாழ்வார்கள். ஆங்கிலத்தில், Don't reinvent the wheel, என்று கூறுவார்கள். சக்கரத்தை மறுபடி கண்டுபிடிக்காதே. சக்கரத்தை கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த காரணத்தினாலேயே, மனிதன் நாகரிகத்தில் மேன்மேலும் வளர்ந்தான். சக்கரம் கண்டுபிடிக்கும் அறிவானது, தலைமுறைகளுக்கு கிடைத்த காரணத்தால், அவர்கள் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.
இதனை, பெர்னாட்ஷா அழகாக விளக்குகிறார்.
“Life is no brief candle to me. It is a sort of splendid torch which I have got a hold of for the moment, and I want to make it burn as brightly as possible before handing it on to future generations. - Bernard shaw
என்னைப் பொருத்தவரை, வாழ்க்கையானது குறுகிய காலம் வாழும் மெழுகுவர்த்தி அல்ல. நான் கண நேரம் பிடித்திருக்கும் வாய்ப்பளிக்கப்பட்ட, பிரகாசமான விளக்கு போன்றது. எதிர்கால தலைமுறைக்கு அதை கொடுப்பதற்கு முன்பு, அதை எவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ, அவ்வளவு பிரகாசமாக எரியவைத்து, கொடுக்க விரும்புகிறேன். - பெர்னாட்ஷா
எனவே, ஒரு சராசரி மனிதன், அவனால் சமூகத்தில் எந்த ஒரு விஷயத்தை மேம்படுத்த முடியுமோ, மேம்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு, மேம்பட்ட சமூகத்தினை அளிப்பதற்கான தனது பங்கினை ஆற்ற வேண்டும்.
ஒரு தமிழாசிரியர், எளிதில் தமிழ் இலக்கணத்தை கற்பதற்காக புத்தகம் போடலாம். ஒரு கொத்தனார் சிலருடன் சேர்ந்து, நல்லதொரு சமுதாய கூடத்தை கட்டிக் கொடுக்கலாம். படித்தவர்கள், படிப்பறிவில்லாதவர்களுக்கு எழுத்தறிவு கொடுக்கலாம்.
உண்ணும் உணவில் உலக ஒற்றுமை கண்டிடு.
உழைப்பால் பதில் உலகுக்கு தந்திடு - வேதாத்திரி மகரிஷி
ஒருவன் உண்ணும் உணவு, உலகிலுள்ள பல்வேறு மக்களின் உழைப்பால் வந்தது. மனிதனும் தனது உழைப்பால், உலகை உய்விக்க வேண்டும்.
ஒவ்வொரு சராசரி மனிதனும், தன்னால் இயன்ற உழைப்பின் மூலமாக, உலகினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயல வேண்டும். அவன் உண்ணும் உணவு, சமுதாயத்தினால் கிடைத்தது. அவன் உழைப்பின் மூலம், சமுதாயக் கடனை திருப்பி செலுத்த வேண்டும். சமுதாயத்தை மேம்படுத்த உழைக்க வேண்டும்.
நன்றி. சுரேஷ்மணியன் M A,
( ப பி)
Comments
Post a Comment