ஏந்தல், தாங்கல், என்ற இரு சொற்களின் பொருளறிவோம்
அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது .
ஆனாலும் இரு சொற்களும் நீர்நிலையை குறிக்கும் சொல்லாகும்.
மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை உடைய நீர் நிலை ஏந்தல் ஆகும்.உடையார்பாளையம் அருகே உள்ள இடையாறு பக்கம் உள்ள ஏரிக்கு அருகே உள்ள ஊரின் பெயர் ஏந்தல் ஆகும். ஏரியின் பெயரே ஊர்ப்பெயராகவும் ஆயிற்று.
தாங்கல் என்பது அருகில் உள்ள ஏரியின் உபரி நீர் அல்லது ஆற்று நீரை சேமிக்கும் நீர் நிலையின் பெயரே தாங்கல் ஆகும் .தாங்கலேரி எனும் பெயர் கொண்ட ஏரி தத்தனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்திற்கு நீர்நிலையின் பெயர் தாங்கலேரி என்பதாம்.
ஆக ஏந்தல், என்பதும், தாங்கல் என்பதும் நீர்நிலையின் பெயராகும்.
ஆய்ந்தறிவீர் தமிழ் மறவீர்!
இப்படிக்கு - சுரேஷ் மணியன் M.A,
Comments
Post a Comment