சமீபத்தீல் ஒரு பாக்கெட் காற்று வாங்கினேன். கம்பெனிக்காரர்கள் நல்லவர்கள் போலும் அதில் சில சிப்ஸ்களையும் போட்டிருந்தனர். ###BINGO
அரியலூரில் இருந்து தென்கிழக்கே 22 கி மீ தொலைவில் உள்ள ஊர் ஜெ.சுத்தமல்லி. அங்கிருந்து 6 கீ மீ தெற்கே சுத்தமல்லி ஊராட்சிக்குட்பட்ட ஓர் அழகிய சிற்றூர் புளியங்குழி .இவ்வூர் நிலவமைப்பு செம்மண் நிறைந்த, முந்திரி காடுகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கிருந்து 7 கி மீ தொலைவில் வற்றாது வளங்கொழித்து ஓடுகிறது கொள்ளிடம் என்கிற பொன்னி நதி. ஆனாலும் இந்த ஊர் மேடான சிவந்த சரளைக் கற்கள் கொண்ட மேட்டுப்பகுதி என்பதால், முற்காலங்களில் வானம் பார்த்த பூமியாக மானாவாரி பயிர்களே விளைந்தது. வளர்ந்து விஞ்ஞான அறிவியல் கருவிகளின் வரவால் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார் உதவியால் சுத்தமல்லி கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் ஆழ்ந்த உழைப்பை செலுத்துகின்றனர். முற்காலத்தில் அரியலூர் என்றால் எவ்வாறு கொத்தமல்லி பிரபலமோ ,அதே போல் சுத்தமல்லியும் ஒரு காலத்தில் கொத்தமல்லிக்கு பிரபலம். கரிசல்மண் நிறைந்த பகுதியில்தான் இப்பயிர் அமோகமாக விளையும். சுத்தமல்லி, புளியங்குழி, ஆலவாய், உல்லியக்குடி, கோரைக்குழி, இன்ன பிற சுற்றுவட்டார ஊர்களில் செம்மண் மிகுந்து காணப்படுவதால் முந்திரிக்காடுகளும் அதிகம். அதே