Skip to main content

Posts

குறும்பு மந்தி

தோழி ____ இந்த வார்த்தை சங்ககாலத்திலும், சமகாலத்திலும் தவிர்க்கமுடியாததாகும். அதிலும் சங்க இலக்கியத்தில் தோழி என்பவள் தலைவியின் சிறுவயது முதலே உடனிருந்து பழகி தலைவிக்கு மிக்க உறுதுணையாகவும், களவு வாழ்வில் தலைவி  ஈடுபடும்  போதும் ,தலைவன் பிரிவால் வாடும் தலைவிக்கு ஆறுதல் கூறுபவளாக, நல்லது கூறி ஆற்றுபடுத்துபவளாக  தலைவியை பிரிந்து செல்லும் தலைவனுக்கு  அறவுரை கூறுபவளாக, தலைவி கற்பு வாழ்க்கையில் ஈடுபட்டிட அறத்தொடு நிற்கும் முதல் கருவியாக தோழியே திகழ்கிறாள்.  அகப்பாடல்களில் தோழி என்னும் பாத்திரத்தை தவிர்க்க நேர்ந்தால் அகப்பாடல்களின் சுவை முற்றாக இழக்க நேரிடும், அத்தகைய முறையில் புலவர்களால் உருவாக்கப்பட்டதே இப்பாத்திரம். அதிலும் தோழிக்கூற்று வழியாக பல வாழ்வியல் கூறுகளை  பல இனிமையான இயற்கை நிகழ்வுகளோடு இயைந்த பாடல்களை  படிக்குந்தோறும் ஒருவகையான இலக்கிய இன்பத்திற்கு ஏது நிகர். நற்றிணையில் பொதும்பில் கிழார் எனும் புலவரின் பாடலொன்றில், பலகாலமாக தலைவன் ஒருவன்  தலைவியை காதலித்து இன்பம் தூய்த்து வருகிறான். பகல் பொழுதில் திணைப்புனத்தில்  திணையுண்ண வரும்...

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி : உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு  இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன் கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர். கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் ...

காளமேகம்

காளமேகப் புலவரின் தனிப்பாடல் என்றாலே எப்போதும் எனக்கு தனியாத பெருவிருப்புண்டு. எனது கல்லூரி காலத்தில் தத்தனூர் கிளை நூலகம் என்னுள்  இருந்த புத்தக பசியை போக்கி,  புதிய பாதையை எனக்கு அமைத்துக் கொடுத்தது.  அங்குதான் காளமேகப் புலவரோடு எனக்கு அறிமுகம் கிடைத்தது கம்பனின் தனிப்பாடல்கள் நிறைய கிடைத்தன.  அந்த வகையில் தமிழில் குறிப்பிட்ட ஒரே வர்க்க எழுத்தை வைத்து அவர் எழுதிய  பாடல் மிகவும் ரசனைமிக்கது . அந்த பாடலை ஒரு முறை வாய்விட்டு உரக்க வாசித்து பாருங்கள் நாக்கும், பற்களும் நன்றாக நாட்டியம் ஆடுவது போல இருக்கும்.  இதோ அப்பாடல். தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது? உரத்துப் படிக்கும்போது பேசும் சக்தியற்ற ஊமை மனிதன் பிதற்றுவது போல இருக்கும். தகர வரிசை எழுத்துக்களை கண்டவிதமாக அடுக்கி எழுதிவைத்துள்ளது போல தோன்றும். ஆனால் ஆழ்ந்து படித்துக் கருத்தை அறியும்போது காளமேகப்புலவரின் திறமையை மட்டுமல்ல, தமிழ்மொழியின் வலிமையையும் எண்ணி எண்ணி இறும்பூதடையாமல் இருக்க முடியாது. ...

கம்பன்

அனைவருக்கும் வணக்கம். நிற்க,  கவிச்சக்ரவர்த்தி,  நம் பாட்டன் கம்பனுடைய  ராமகாதையில் வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான். தன் நெஞ்சில் தைத்த வாளியை (அம்பு)  எடுத்துப் பார்க்கிறான் வாலி . அந்த அம்பில் இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான், பின்வருமாறு கம்பன் தன் பாடலில் கூறுவான் மும்மை சால் உலகுக்கு எல்லாம்     மூல மந்திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும்     தனிப் பெரும் பதத்தை, தானே இம்மையே எழுமை நோய்க்கும்     மருந்தினை, ‘இராமன் ‘என்னும் செம்மை சேர் நாமம் தன்னைக்     கண்களின் தெரியக்  கண்டான்.            மூன்று என்னும் தொகை பொருந்திய (வானம், பூமி, பாதாளம்) என்னும் உலகங்கள் யாவற்றிற்கும் ,ஆதாரமாய்ப் பொருந்திய மந்திரத்தை , முழுவதுமாகத் தம்மையை வழிபடும் அடியார்கட்கு அளிக்கும்,  ஒப்பற்ற சிறப்பு மிக்க சொல்லை , தான் தனித்தே இந்தப் பிறவியிலேயே , எழுவகைப் பிறப்புக்களாகிய நோய் வராமல் தடுக்கும் மருந்தை; இராமன் என்கின்ற ,  சிறப்...

தம் பதியில் கலங்கிய மீன்

என்னவளே ! இரவில் தெருவில் நடக்காதே உன் முகத்தை நிலவென்று நினைத்து விண்மீன்கள் தரைக்கு வந்து விடப்போகின்றன . அன்புடன் : சுரேஷ்மணியன். 
சங்க காலத்தில் தான் விளையாடிய போது தவறி புதையுண்ட விதை செடியாக வளர்வதை  கண்ட பெண்ணொருத்தி அதற்கு நீரும் பாலும் இட்டு வளர்த்தாளாம்  வயது முதிர்ந்த பிறகு தன் கட்டழகு காதலனோடு அந்த மரத்தின் அருகே சந்திக்கிறாள்,  காதலன் அவளிடம் காதல் வார்த்தை பேசுகிறான் வெட்கப்பட்டுக்கொண்டே அந்த பெண் சொன்னாளாம் இங்கே என் அக்கா இருக்கிறாள் என்றாள் வாருங்கள் வேறிடம் செல்வோம் என்கிறாள் காதலன் பதட்டத்தோடு எங்கே உன் அக்கா ?  என்றான் அவள் கை நீட்டி தான் வளர்த்த மரத்தை காண்பித்தாளாம். இறைவா அந்த பெண் கைகாட்டிய மரமாக இந்த மரம் இருக்க வேண்டாம் விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ் முளை அகைய நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று அன்னை கூறினள் புன்னையது நலனே அம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் துறை கெழு கொண்க நீ நல்கின் இறைபடு நீழல் பிறவுமார் உளவே 172 நெய்தல்   ( ஜெயங்கொண்டம் To அரியலூர் சாலையில் காட்டுபிரிங்கியத்தில் சாலை விரிவாக்கத்திற்காக மூதாதைய...

சிரிப்பு

முகநூலில் படித்ததில் பிடித்தது சிரிக்க மட்டும்.. ஒரு நாள் திடீரென்று ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது பேர் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்! அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் இறந்து விட்டனர் என்று! அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த நாராயணசாமியை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர். அதற்கு நாராயணசாமி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார். "அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு நாராயணசாமி சொன்னார். "எல்லோரும் டில்லி எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "டில்லி எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைவரும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார். உடனே...