Skip to main content

ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை

மூங்கிலாய் வந்தேன்
புல்லாங்குழலாக்கினாய்

மரமாய் வந்தேன்
சிலையாக்கினாய்

அரும்பாய் வந்தேன்
மாலையாக்கினாய்

தகரமாய் வந்தேன்
தங்கமாய் மாற்றினாய்

மண்ணாய் வந்தேன்
மட்பாண்டாமாய் மாற்றினாய்

ஒலியாய் வந்தேன்
இசையாக்கினாய்

மரமாய் வந்தேன்
படகாக மாற்றினாய்

விதையாய் வந்தேன்
விருட்சமாய் மாற்றினாய்

அகரம் கேட்டேன்
அனைத்தும் தந்தனை

நான் ஒரு நூறு கேட்டேன்
(அக-புற )நானூறு தந்தனை

பசியாற பால் கேட்டேன்
முப்பால் தந்தனை

இன்னது வேண்டுமென்றேன்
இனியவை தந்தனை

மணிகள்  ( Money)  கேட்டேன்
சிந்தாமணி தந்தனை

களிப்போடு தொகைகள் கேட்டேன்
கலித்தொகையே தந்தனை

காரம் கேட்டேன்
சிலப்பதிகாரம் தந்தனை

உம்மைக் கேட்டேன்
தமிழை  தந்தனை.

உயிர் நீ
என் உயிர் நீ

எனக்கு கல்வி புகட்டிய பிள்ளையார் கோவில் தங்கராசு ஆசிரியர் முதல், இன்று வரை எனக்கு நற்கல்வி புகட்டும் தாளாளர் அய்யா ,இயக்குநர் அய்யா உள்ளிட்ட, அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் எனது அன்பான
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

தினம் தினம் ஏதோ ஒரு அனுபவத்தை போதிக்கும் அனைத்து பொருளும் எனக்கு ஆசிரியரே ! 

உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
அன்போடு, என்றும் உங்களின் மாணவன்
சு.சுரேஷ்மணியன். MA,

Comments

Post a Comment

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

அம்பிகாபதி

தந்தை மகற்கு ஆற்றிய உதவி : உலக இலக்கியங்கள் வழி நாம் அறியும் உன்னதமான காதல் ஜோடிகள் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு  இவ்வாறான இன்ன பிறர். ஆனால் தமிழின் தனிப்பாடல்கள் வழியாக நம் பாட்டன் கம்பருக்கு அம்பிகாபதி என்ற மகன் இருந்ததாகவும், அவன் சோழ மன்னனின் மகளான இளவரசி அமராவதியை காதல் செய்ததாகவும், அந்தக் காதலே அவன் ஆவி பறிபோவதற்கு காரணமாகவும் இருந்ததாகவும் அறிய முடிகிறது . அறிஞர் பெருமக்கள் கம்பருக்கு மகன் இருந்து அவன் சோழ மன்னனால் கொல்லப்பட்டான் என்பதற்கான ஆதாரங்களை, தரவுகளை, யூகங்களை கம்பராமாயணத்தின் வழி விளக்க முயற்சித்துள்ளனர்.  அதாவது ராமனை பிரிந்த தசரதனின் அழுகைக்கும், இந்திரஜித் மாண்ட போது ராவணின் அழுகைக்கும் இடையே நிரம்ப வித்தியாசம் காணப்படுகிறது.  ராவணன் அழும் போது கம்பனே ராவணணாக மாறி அழுவது போன்ற துன்பியல் உணர்வைக் காண முடிகின்றது என்பர். கல்லூரியில் நான் தமிழிலக்கியம் பயில ஆரம்பித்த தொடக்க காலத்தில் எம் ஊரான  "சுத்தமல்லி " யை சேர்ந்த திருச்சி தேசிய கல்லூரியில் இயற்பியல் பயின்ற, இன்றும் அதிமுக வில் பொறுப்பு வகிக்கும் என் உறவுமுறை மாமனான முருகன் அவர்கள் முதன் ...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.