Skip to main content

Posts

குண்டலகேசி

மறிப மறியும் மலி்ர்ப மலிரும் பெறுப பெறும் பெற்று இழப்ப இழக்கும் அறிவது அறிவார் அழுங்கார் உவவார் உறுவது உறுமென்று உரைப்பது நன்று                     ___ குண்டலகேசி  அழியும் பொருளெல்லாம் அழிந்தே தீரும்; (அவற்றை யழியாமற் பாதுகாத்தல் இயலாது)அவ்வாறே வளரும் விதியுடைய எல்லாமும்  வளர்ந்தே தீரும் , (அவற்றை வளராமல் தடுக்க முடியாது)  பயன் பெறுகின்ற விதியுடைடையன பெற்றே தீரும் ,(அப்பயனைப் பெறாதவாறு செய்தல் இயலாது),  அதேபோல  பெற்றபயனை இழக்கும் விதியுடைய அவற்றை இழந்தே தீரும், (இழக்கமுடியாதபடி செய்ய முடியாது ) ஆதலால் அறிதற்குரிய பொருளியல்பினை அறிந்த மேலோர்,  தமக்குப் பொருளிழவு நேர்ந்ததே இது பொருளியல்பென் றுணர்ந்து அந்த இழப்பு பொருட்டு வருந்துதலிலர். அவ்வாறே தாம் சிறந்த பேறுகளைப் பெற்ற வழியும் இஃது ஊழின் செயலென் றுணர்ந்து அப்பேறு கருதியும் பெரிதும் களிப்பதுமில ராவர்;  ஆதலால் “வருவது வந்தே தீரும்” என்று உலகோர் கூறும் பழமொழி மிகவும் வாய்மையுடையதென்று கொள்ளுங்கள் . வணக்கம்  சுரேஷ்மணியன் M A ,

குறள் கவிதை

கண்ணிதழ் மெல்ல மறைத்து பார்வைதன் அளவை சிறுத்து  நீ  பார்த்த  இந்த சிறுபார்வையே  காதல் நோய்க்கு  ஏற்ற மருந்து. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது ( குறள் எண்:1092) சுரேஷ்மணியன் M A, 

கடிகாரம்

என்னை ஏன் அடிக்கடி பார்க்கிறாய்?  பார்த்து என்ன கிழித்துவிட்டாய்?  கிழிக்கப்போகிறாய்?   கேட்டுக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கிறது  என் கைகடிகாரம் 

குறள்கவிதை

         குறள்கவிதை  மங்கைகொண்ட காதலை மடைமாற்றலாம்  என்று நினைக்காதீர் ! என் இதய வயலில்  நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன் !  ஊரார் ஏளனப் பேச்சை எருவாக்கி  தாயின் இடிச்சொல்லை நீராக்கி  இதய வயலில்  காதல் பயிர் வளர்க்கிறேன் ! பரிகாசம் பேசி காதல் பயிரை  அழித்துவிடலாமென எண்ணாதீர் ! நெய்யை ஊற்றி  நெருப்பை அணைக்க முயலாதீர் ! என் இதய வயலில்  நான் காதல் பயிரொன்று வளர்க்கிறேன்  .          கவிதையின் கரு  ;  ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் (குறள் எண்:1147) நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் (குறள் எண்:1148) வள்ளுவர் வரிகளுடன்  ; சுரேஷ்மணியன் M A, 

திருவள்ளுவமாலை, கபிலர் பாடல்

அனைவருக்கும் அன்னைத்தமிழ் வணக்கம்.  திருவள்ளுவமாலை 5 ஆம் பாடல் ; கபிலர்  தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது?      என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோல ஆகும் சுரேஷ்மணியன் M A , 

திருவள்ளுவமாலை 4 ஆம் பாடல் விளக்கம்

திருவள்ளுவமாலையில் உக்கிரப்பெருவழுதியார் பாடியது.  நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம் சிந்திக்க கேட்க செவி ( 4 ) கருத்துரை :  இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார்.       நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின் பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும். என்கிறார் புலவர். சுரேஷ்மணியன் M A, 

கிளியே ! கிளியே!

பாட்டிலுக்கு பெயர் பெற்ற ஊரை  தன் பாட்டினால் புகழடையச் செய்த  பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அழகின் சிரிப்பு நூலில் கிளியின் தன்மை, அழகு,  குணம் பற்றி கூறுமிடத்து, ஒரிடத்தில் கிளியைப்பற்றி பாடுகிறார் .   முடிகிற இடத்திலிருந்து புதிய எண்ணங்களும், ஆற்றொணா வருத்தமும் இக்காலத்திய இளையோர் பற்றி நினைக்கையில் மேலிடுகிறது எனக்கு  "" காட்டினில் திரியும் போது கிரீச்சென்று கழறு கின்றாய்; கூட்டினில் நாங்கள் பெற்ற குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்! வீட்டிலே தூத்தம் என்பார் வெளியிலே பிழைப்புக் காக ஏட்டிலே தண்ணீர் என்பார் உன்போல்தான் அவரும் கிள்ளாய்!  '' கிளியே ! காட்டில் திரிகிறபோது கிரீச் கிரீச்சென்கிறாய்  கூட்டில் இருக்கும் போது  எங்களின் குழந்தைகள் மழலைமொழி போல கொஞ்சுகிறாய்  சிலர் வீட்டில் இருக்கும் போது "" தூத்தம் '' ( அக்ரஹார வழக்கு ) என்பார் ,பொதுவெளியில் வந்தால் அதனை தண்ணீர் என்பார்கள். உன்னைப் போல்தான் அவரும் கிளியே வீட்டில் ஒன்று பேசுவார் வெளியில் ஒன்று பேசுவார்.  என்கிறார் பாவேந்தர்.  மேற்கண்ட கிளிக்கு கூறிய ஒப்புமையை, தற்கால நம் தமிழர் பேசும...