Skip to main content

கிளியே ! கிளியே!


பாட்டிலுக்கு பெயர் பெற்ற ஊரை 

தன் பாட்டினால் புகழடையச் செய்த 
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அழகின் சிரிப்பு நூலில் கிளியின் தன்மை, அழகு, 
குணம் பற்றி கூறுமிடத்து, ஒரிடத்தில் கிளியைப்பற்றி பாடுகிறார் .

  முடிகிற இடத்திலிருந்து புதிய எண்ணங்களும், ஆற்றொணா வருத்தமும் இக்காலத்திய இளையோர் பற்றி நினைக்கையில் மேலிடுகிறது எனக்கு 


"" காட்டினில் திரியும் போது
கிரீச்சென்று கழறு கின்றாய்;
கூட்டினில் நாங்கள் பெற்ற
குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!
வீட்டிலே தூத்தம் என்பார்
வெளியிலே பிழைப்புக் காக
ஏட்டிலே தண்ணீர் என்பார்
உன்போல்தான் அவரும் கிள்ளாய்!  ''

கிளியே ! காட்டில் திரிகிறபோது கிரீச் கிரீச்சென்கிறாய் 
கூட்டில் இருக்கும் போது  எங்களின் குழந்தைகள் மழலைமொழி போல கொஞ்சுகிறாய் 

சிலர் வீட்டில் இருக்கும் போது "" தூத்தம் '' ( அக்ரஹார வழக்கு ) என்பார் ,பொதுவெளியில் வந்தால் அதனை தண்ணீர் என்பார்கள். உன்னைப் போல்தான் அவரும் கிளியே வீட்டில் ஒன்று பேசுவார் வெளியில் ஒன்று பேசுவார். 

என்கிறார் பாவேந்தர். 
மேற்கண்ட கிளிக்கு கூறிய ஒப்புமையை, தற்கால நம் தமிழர் பேசும் முறையோடு ஒப்பிட்டும் பார்க்கலாம்.


 வீட்டிலே சோறென்பார் ,எலுமிச்சை சோறென்பார்,தயிரென்பார், கோழிக்குழம்பென்பார், பொறியலென்பார், சட்டையென்பார், முடியென்பார்,மயிறென்பார் ..
இதுபோல் உள்ள தமிழை இல்லத்தில் பேசுவார்,
ஆனால் 
பொதுவெளியிலோ நாகரீகம் கருதி தமிழை மறைத்து 
ஒய்ட் ரைஸென்பார், லெமன் ரைஸென்பார், Curd rice என்பார், Chiken greavy என்பார், Side dish என்பார், Shirt என்பார், Hair cutting என்கிறார் கிளியே உன்னைப்  போலவே இவர்களும் கிளியே  ... என்று நினைக்கத் தோன்றுகிறது.

சுரேஷ்மணியன் M A,



Comments

Popular posts from this blog

கம்பனின் கவித்திறம்.

தமிழின்பால் மிகுந்த ஈடுபாட்டை என்னுள் புகுத்தியது கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலான " கோபல்ல கிராமம்,  கோபல்ல கிராமத்து மக்கள், " எனும் இரு  நாவல்களை நான் பன்னிரண்டு வயதில் படித்து முடித்தேன் அதன் பிறகு நாவல்கள் மீது தணியாத ஆர்வம்.  பிறகு பத்தாம் வகுப்பு பயின்ற காலத்தில் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை நூலொன்றை எதேச்சையாக படிக்க நேர்ந்தது அந்நூலின் கீழ்கண்ட வரிகள் ஆழ்மனதின் அடிவாரத்தில் சிலந்தி வலையாய் பின்னிக்கொண்டது  இதோ !   அந்த வரிகள் . " தண்டவாளத்தில் நீ தலை வைத்து படுத்ததால்தான் தலைவா ! இன்று தமிழ் நிமிர்ந்து நிற்கிறது. மேலும், அதில் பாரதி பற்றிய கவிதையும் படித்தேன் " இவன் வெள்ளை யானைகளோடு போராடிய போது வீழ்ந்ததில்லை கறுப்பு யானையோடு கைகுலுக்கிய போதுதான் காணாமல் போனான். இவ்வாறான கவிதை வரிகள் என்னுள் கிளர்ச்சியை ஏற்படுத்தின ஆனால் நான் கல்லூரியில் போய் சேர்ந்தது பி.காம் பாடப்பிரிவு ,  அங்கு அக்கவுண்ட்ஸ்,  ஆடிட்டிங்,  பேங்கிங் இது போன்ற தாள்களின் தன்மைகளை பேராசிரியர்கள் விள...

படித்தேன் அது படி தேன்.

சிந்தை சூழ் கம்பன் கம்பனை எனக்குள் ஆழ வேரூன்ற வைத்த இடம் தத்தனூர்  MR கல்லூரியும், தத்தனூர் மேலூர் கிளை நூலகமும்  ஆகும். கம்பன் என்றாலே எனக்குக் குற்றால நீர்வீழ்ச்சியாய் உள்ளம் பூரித்துப் போகிறது, வார்த்தைகள் விக்கித்து நிற்கின்றன.  என்னவென்று சொல்வேன், ஏதென்று சொல்வேன் அவன் காவியப் புகழை.  நெய்தலுக்கும், பாலைக்கும், மருதத்துக்கும், முல்லைக்கும் மேலாக உச்சியில் இருக்கும் குறிஞ்சி நிலத்தின் உச்சியில் வானோடு கைகோர்த்து, மதியோடும், கதிரோடும் தோழமை பேசும் உச்சி மலையில் விளைந்த கற்பகமரம் அவன். கண்ணதாசன் கம்பரின் ஆற்றலைப் புகழும் போது, "  பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு - இன்னும் வித்தாக வில்லையென்று பாடு! சீதை நடையழகும் ஸ்ரீராமன் தோளழகும் போதை நிறைந்ததெனச் சொல்லி - எனைப் போட்டான் மதுக்குடத்தில் அள்ளி! அண்ணனொடு தம்பியர்கள் நாலாகி ஐந்தாகி ஆறேழு ஆனவிதம் கூறி - எனை ஆளுகிறான் மூளைதனில் ஏறி!  " என்று புகழ்ந்து பாடுவார். அத்தகைய வளமிக்க கற்பனைக்கும், கருத்துக்கும் உரித்தானவர் கம்பர் என்றால் அது மிகைஅன்று. அயோத்தியை வி...

நீ

கொஞ்சம் மது  தொட்டுக்கொள்ள உன் நினைவுகள்,  நீ நினைக்க நான், புகைக்க உன் புன்னகை, இனி வேறென்ன வேண்டும் எனக்கு. இப்படியாக பயணிப்போம்..... கரிசல் நாடன்.